Wednesday, September 12, 2012

சொன்னது நீ தானா ? - 3


Pic: Source

முதல் பாகத்தை இங்கே படிக்கலாம் (click here)

இரண்டாம் பாகத்தை இங்கே படிக்கலாம் (click here)


 அன்று தர்ஷனும் காயத்ரியும் அலுவலகத்தில் அவர்கள் வழக்கமாக அமரும் மரத்தடியில் அமர்ந்திருந்தார்கள்.  காயத்ரி சற்று ஆத்திரத்துடனே இருந்தாள்.

"ஹேய் என்ன ஆச்சு உனக்கு..மத்தியானம் லஞ்சுலையும்(lunch) உம்முன்னே இருந்தே..என்ன பிரச்சினை உனக்கு? சொல்லு நான் தீர்த்து வைக்கிறேன்.." - சற்று விளையாட்டாகப் பேசி காயத்ரியை சகஜ நிலைக்குக் கொண்டு வர நினைத்தான் தர்ஷன்.

"கரெக்டு..நீ தீர்த்து வைச்சிடுவ..அதிலே எந்த சந்தேகமும் இல்லை..என்ன ஏதாவது சினிமா பார்க்கிறப்போ மட்டும் என் பிரச்சின எனக்குன்னு விட்டுடுவ..அப்படித் தானே?"

"Sigh..இன்னும் உனக்கு அந்தக் கோவம் தீரலையா..actualla அன்னைக்கி நான் வரலாம்னு  தான் நினைச்சேன்.."

"ஆனா படம் முடியல அதானே? இடியட்..அன்னைக்கி அவர் வராம இருந்திருந்தா என் நிலைமையை யோசிச்சிப் பாரு? பைத்தியக்காரி மாதிரி ரோட்ல நின்னுட்டிருந்திருப்பேன்..உன்னை ஒரு friendன்னு நம்பிக் கூப்பிட்டேன் பாரு.. என்னைச் சொல்லனம்"

"காயு உன் கிட்டே ஒன்னு சொல்லவா அன்னைக்கி ராத்திரி நான் வந்தேன்..உன் கிட்டே சும்மாச் சொன்னேன் தியேட்டர்ல இருக்கேன்னு..குளிச்சிட்டு கிளம்பி வர கொஞ்சம் நேரம் ஆயிடிச்சு.."

"வாய் பூரா பொய்யி..அந்த ராத்திரி நேரத்திலே இங்க நான் தனியா நிற்கிறதோட,உனக்குக் குளிச்சிட்டு ஸ்மார்டா  வர்றதுத் தான் முக்கியமாப் போச்சா?"

"நான் என்ன சொல்ல வர்றேன்னா காயு.."

"வெயிட் வெயிட்..இப்போப் புரியுது..அன்னைக்கி ராத்திரி குடிச்சிருந்தியா?"

ஆம் என்பது போல தர்ஷன் தலையசைத்தான்,அசடு வழிய நின்றான்,பிறகு தொடர்ந்தான்,

"இல்லை நான் பண்ணதுத் தப்புத் தான்..அன்னைக்கி ராத்திரி உனக்காகத் தான் அந்த பனியிலேக் கூட குளிச்சிட்டு வந்தேன்..வந்ததும் சாரி கேட்டு சமாதானப்படுத்திடலாம்னுத் தான் நினைச்சேன்..ஆனா அதுக்குள்ளே.."

காயத்ரி நம்பிக்கையில்லாமல் அவனை முறைத்துப் பார்க்க,

"என்ன காயு அப்படிப் பார்க்கிற,நான் சொல்றதிலே நம்பிக்கை இல்லையா? உனக்கே தெரியும் எனக்கு உன்ன எவ்வளவுப் பிடிக்கும்னு..உன்னை விட எனக்கு வேற என்ன முக்கியம்?"

காயத்ரி குழப்பத்துடன் பார்க்க,

"ஏன் காயு,நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன்னு உனக்குத் தெரியாதா..? உனக்காகத் தானே காயு நான் பைக்ல, கார்ல வராம,பஸ்ல வந்தேன்,நீ பிடிக்கலைன்னு சொல்லித் திட்டினதாலேத் தானே 4 மாசம் கஷ்டப்பட்டு அந்நியன் விக்ரம் மாதிரி வளர்த்த முடிய கட் பண்ணினேன்..நீ எப்போ smoke பண்ற பசங்களைப் பிடிக்காதுன்னுச் சொன்னியோ அப்போவே சிகரட் பிடிக்கரதையே நிறுத்திட்டேன்..கொஞ்சம் டைம் கொடு குடிக்கறதையும் விட்டுடுவேன்.."

இதை சற்றும் எதிர்பாராத காயத்ரி அதிர்ந்துப் போனாள்..

"என்ன சொல்ற நீ?" - என காயத்ரி அலற,

படு ரொமான்டிக்காக முட்டிப்போட்டு,"I லவ் யு காயு.." - என்றான். காயத்ரி நிலைகுலைந்துப் போனாள்.பதில் பேச முடியாமல் திகைத்தாள்,ஓரளவு சமாளித்துக் கொண்டு,

"தர்ஷன்,என்னப்பா நீ இப்படி எல்லாம் பண்ற? இது எப்படி..இல்லை இது சரியா வராது..நான் சொல்றதக் கேளு" - காயத்ரி பேச முடியாமல் தடுமாறினாள்,

"என்ன காயு,வீட்டை நினைச்சி பயப்படுறையா?வீட்டிலே ஒத்துக்க மாட்டாங்க அதானே உன் பிரச்சினை?"

"ஆமாம்..ஆனா அது மட்டுமி..." - காயத்ரி பேசத் தொடங்க,

"இங்கே பாரு காயு,நீ இப்போவே இதுக்கு பதில் சொல்லனம்னு இல்லை.. Take your own time.. ஆனா நல்லப் பதிலாச் சொல்லு ப்ளீஸ்..நீ இல்லாம என் lifeல ஒண்ணுமே இல்லை..புரிஞ்சிக்கோ"

தர்ஷனின் இந்தச் செயல் ஏற்கனவே கடும் குழப்பத்திலிருந்த காயத்ரிக்கும் மேலும் மன உளைச்சலைக் கொடுத்தது. தன வேலைகள் பலவற்றை தர்ஷனைச் செய்யச் சொல்லிக் கேட்டிருக்கிறாள்.தனக்கொரு PPT presentation தயார் செய்யக் கூட தர்ஷனின் உதவியைத் தான் நாடினாள்.இப்படி அவர்களுக்குள் நிகழ்ந்த பல நிகழ்வுகள் அவள் மனத்திரையில் ஓடிக்கொண்டே இருந்தன .. வேறு சில நினைவுகளும் காயத்ரியை வாட்டி வதைத்தன..

"ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ..........." - என வெறி பிடித்தவளைப் போலத் தூக்கத்தில் கத்தினாள். அலறி அடித்துக் கொண்டு வந்த அவளது அம்மாவும் பாட்டியும் காயத்ரியை சமாதானப்படுத்தினார்கள்.

சில நாட்களாகவே பிரமைப் பிடித்தவளைப் போலிருந்த காயத்ரிக்கு அவளது அப்பா மேலும் ஒரு அதிர்ச்சி தரும் செய்தியைச் சொல்ல,காயத்ரிக்குப் படபடப்பு அதிகமாயிற்று.அதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.நிலைமை மோசமடைந்து விட்டது என்பதை உணர்ந்தாள்.

ரமேஷ் சொன்ன வார்த்தைகள் தான் நினைவுக்கு வந்தன.

இப்படி ஒரு situationல கூட என்னைக் கூப்பிடனம்னு தோனலைல உனக்கு? 

மின்னல் வேகத்தில் செயல்பட்டாள்.


                                                                             ***



ழக்கமாக அவர்கள் சந்திக்கும் தேநீர் கடையருகே(டீக்கடை) நின்று பேசிக்கொண்டிருந்தார்கள் ரமேஷும் பிரேமும்.

"என்ன டா,அன்னைக்கி ராத்திரி அந்தப் பொண்ண பத்திரமா வீட்டிலே விட்டுட்டு வந்துட்டியா?" - பிரேம்

"ஹ்ம்ம்..ரொம்ப தேங்க்ஸ் டா..நல்ல நேரத்திலே வந்து பைக் தள்ளிட்டுப் போனே..உன் ரூம்மேட்டுக்கும் என் சார்பிலே ஒரு நன்றி சொல்லிடு மச்சி" - இதையும் கூட சற்று வருத்தமான குரலில் தான் ரமேஷ் சொன்னான்.

"ஏன் இன்னும் ஒரு பத்து நாள் கழிச்சி நன்றி சொல்றது தானே..பரதேசி..அவ கிட்ட என்ன introduce பண்ணியா டா நீ..ராஸ்கல் கை குடுத்தா முறைக்கிறே நீ"

"அட ஏன் டா நீ வேற..அவ என்னையே புதுசா அறிமுகமானவன் மாதிரித் தான் பார்க்கிறா..இந்த லட்சணத்திலே இவர வேற அறிமுகப்படுத்தணமாம்... நிலைமை தெரியாம நீயும் ஏண்டா கடுப்பேத்தற?"

"என்ன தான் டா உன் பிரச்சினை? அவ கூட எப்படியும் ஒரு 1 hour தனியாத் தானே இருந்தே.. மனசு விட்டு பேச வேண்டியது தானே..இப்படி புலம்பியே தீர்க்கிறதோட,கிடைச்ச சந்தர்ப்பத்திலே அவ கூட சந்தோஷமா பேசுவியா அதை விட்டுட்டு"

"என்ன டா பேசச் சொல்றே?அவ கிட்டே பேசறதும் அதோ இருக்கே காம்போண்டு சுவரு,அது கிட்டே பேசறதும் ஒன்னுத் தான்"

"எதுக்கு டா இவ்வளவு வெறுப்பா பேசற?"

"பின்னே என்ன டா..ராத்திரி அரை மணி நேரமா ரோட்ல தனியா நிற்கிறா,எனக்கு ஒரு கால் பண்ணலாம்னு கூட தோணலை..என் கூட அவ சரியாப் பேசறது கூட இல்லை டா...அவ என்னை லவ் பண்ணலைன்னாக் கூட பரவாயில்லை டா,ஒரு சாதாரண ப்ரெண்டா(friend) கூட மதிக்க மாட்டேன்கிறா.. அப்படி என்ன அவளுக்குக் கெடுதல் பண்ணிட்டனோ"

"ரெண்டு வாட்டி ப்ரபோஸ் பண்ணியே அதோடவா"

"இரண்டாவது தடவ நடந்ததுக்கப்புறம் அவளுக்கு ஒரு சின்ன தொந்தரவுக் கூட தரலை டா நான்"

"ஹ்ம்ம்..எனக்கென்னவோ இது வேற மாதிரித் தோணுது டா..ரெண்டு வாட்டி உன் காதலை ரிஜக்ட் பண்ணதாலையோ என்னவோ,அவ கொஞ்சம் கூச்சப்படரான்னுத் தோணுது..அவளுக்கு உன்னைப் பிடிக்காம இல்லை டா..கடைசியா இன்னொரு வாட்டி ட்ரை பண்ணிப் பாரேன் மச்சி"

"சில விஷயம் எல்லாம் ஒரு வாட்டி போனா போனது தான்..என் பாழாப்போனக் காதலும் அப்படித்தான்"

"சரி..இப்போ அவளே உன் கிட்டே வந்து உன்ன லவ் பண்றதா சொன்னா ஒத்துக்க மாட்டியா என்ன?"

"நான் அப்படிச் சொல்லலை டா"

"அசடு வழியுதே மூஞ்சிலே.."

"ஆனா நீ சொல்றது கனவிலே கூட நடக்காது நண்பா..அவ என் கூட சேர்ந்த மாதிரி 10 நிமிஷம் பேசறதே அபூர்வம்... அதனாலே நீ சொல்றது நடக்கறதுக்குச் சான்ஸ் இல்லை மச்சி"

"Lifeல எல்லாத்துக்கும் ஒரு turning point வரும் டா"

பேசிக்கொண்டே இருக்க,திடீரென ரமேஷின் மொபைல் ஒலித்தது..காயத்ரி தான் அழைப்பது..

"ரமேஷ், evening ஒரு ஆறு மணிக்கு நம்ம காலேஜ் கிரௌண்டுக்கு(ground) வாங்க ப்ளீஸ்..உங்க கிட்டே முக்கியமான விஷயம் பேசணம்" - எதா படபடப்புடனும் குழப்பத்துடனும் பேசினாள் காயத்ரி.

"என்ன விஷயம்?" - ரமேஷ் கேட்க முற்பட,

"நேரிலே வாங்க..மறந்துடாதீங்க..காத்துக்கிட்டிருப்பேன்" - எனச் சொல்லி அவசராமாக அழைப்பைத் துண்டித்தாள்.

"இந்த phone call கூட உன் காதலுக்கு ஒரு turning பாயிண்ட்டா இருக்கலாம்"

பிரேம் இப்படிச் சொன்னாலும்,ரமேஷ் ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை மட்டும் உணர்ந்தான்.


                                                                             ***


சென்னை அரசுப் பேருந்து ஒன்றில் வந்துகொண்டிருந்தாள் காயத்ரி. நெருக்கடியான சூழ்நிலை.உள்ளுக்குள் ஒரு வித குற்ற உணர்ச்சி கலந்த பயம்.ஆனால் இது தான் முடிவெடுக்க வேண்டிய தருணம்.ஓய்வின்றி யோசித்துக் கொண்டிருந்தது அவளது மூளை.

காயத்ரி நீண்ட நாட்களுக்குப் பிறகு அவளைச் சந்திக்க வருமாறு கூறியது,ரமேஷுக்கு ஒரு வித சந்தோஷத்தைக் கொடுத்தாலும்,இந்த கல்லூரி மைதானம் அவனுக்குள் ஒரு பீதியைக் கிளப்பியது.இங்கு தான் இரண்டு முறையும் காயத்ரியிடம் தனது காதலைச் சொன்னான்,இரண்டு முறையும் மறுத்து விட்டாள்.இதே இடத்திற்கு சம்மந்தமே இல்லாமல் வரச் சொன்னதற்கான கரணம் என்னவாக இருக்குமென ரமேஷ் யோசித்துக் கொண்டிருக்க,

"இதை இந்த இடத்திலே வைச்சிக் கொடுக்கிறதுத் தான் சரின்னு பட்டது.வந்துடுங்க எனக்கு திடீர்னு marriage fix ஆய்டிச்சு" - காயத்ரி பத்திரிக்கையை நீட்ட,ரமேஷ் உறைந்துப் போனான்.

திடீரென அவனது மொபைல் ஒலித்தது,காயத்ரி தான் அழைப்பது."ச இங்கயுமா கனவு வரும்..தூ தூ.."

"ஆமாம் காயு,நம்ம வழக்கமா உட்கார்ற மரத்தடியிலேத் தான் இருக்கேன்..வா வா..ஒன்னும் அவசரம் இல்லை"

கையில் மொபைலுடன் வந்தாள்.பச்சை நிறச் சுடிதார் அணிந்திருந்தாள்.அதிக ஒப்பனைச் செய்து கொள்ளவில்லை என்பது அவளுடைய எளிமையானத் தோற்றத்திலிருந்துத் தெளிவாகத் தெரிந்தது. அவளின் படபடப்பை உணர்ந்த ரமேஷ்,சுற்றி வளைத்துப் பேசாமல்,பக்குவமாக,அன்பாகக் கேட்டான்,

"என்ன காயு..எதுக்கு இவ்வளவு படபடப்பு..whats wrong with you?"

"அது எப்படி சொல்றதுன்னுத் தெரியல..இப்போ.. போன வாரம்..அந்த..தர்ஷன்.. தர்ஷன்.." - தயங்கினாள்,

"தர்ஷன்? ஏதாவது பிரச்சினை பண்றானா? என்னன்னு சொல்லு..நான் வேணும்னா கேட்கவா?" - ஆதரவாகப் பேசினான்..

"இப்போப் பேசலைன்னா எப்போவுமே பேச முடியாது..பேசிடு பேசிடு..." - மூளை கட்டளையிட்டது.. தைரியத்தை வரவழைத்துக் கொண்டாள்.,

"ஆமாம் ரமேஷ்..அந்த தர்ஷன் கூட பெரிய தொல்லையாப் போச்சு..திடீர்னு என்ன லவ் பண்றதா சொல்லிட்டான்.. "

ரமேஷின் முகம் வியர்த்து விட்டது.ஒரு வேளை சற்று முன்பு கண்ட கனவை விடவும் விளைவு விபரீதமாக இருக்குமோ எனப் பயந்தான்..பதற்றத்தை முகத்தில் காட்டாமல்,சர்வ சாதரணமாக கேட்டான்.,

"அதுக்கு நீ என்னச் சொன்னே?"

"யோசிக்கக் கொஞ்சம் டைம் கேட்டேன்" - ரமேஷின் முகத்தைக் கூர்ந்துக் கவனித்தாள்..ரமேஷின் முகம் சுருங்குவதை உணர்ந்தாள்..சற்று உற்சாகமடைந்தாள்.மேலும் தொடர்ந்தாள்,

"இப்போ நீங்க தான் ஹெல்ப் பண்ணனம்" - கேலியாகப் பேச,ரமேஷ் உண்மையில் சற்று ஆத்திரமடைந்து விட்டான்..

"என்ன ஹெல்ப் பண்ணனம்? அவனுக்கென்ன நல்லா கார்ப்பரேஷன்ல நாய்ப் புடிக்கிறவன் மாதிரி இருக்கான்.. கல்யாணம் பண்ணிக்கோ..நல்ல வருவ நீ எல்லாம்" , இப்படி ரமேஷ் பேசியதும் காயத்ரி வாய் விட்டுச் சிரித்தாள்.. ரமேஷ் தன்னைத் தான் இன்னும் விரும்புகிறான் என நினைத்து மகிழ்ச்சியுடன் பேசினாள்.

"ரமேஷ் பிரச்சினையே என்னன்னு இன்னும் நான் சொல்லலையே.." - பேசி முடிப்பதற்குள் ரமேஷின் மொபைல் ஒலித்தது,ஆத்திரமே வடிவாக இருந்தவன்,திடீரென சாந்த ஸ்வரூபியாகி விட்டான்..சிறு புன்னகையுடன்,

"don't worry Pooja..nothing is more important for me..I will be there in Bangalore on Friday evening..ya sure..will call you back yaar.."

அது வரை அவனுடைய ஆத்திரத்தையும் படபடப்பையும் ரசித்துக் கொண்டிருந்தவள்,திடீரென கோபமடைந்தாள்..

"யாரு பூஜா? உங்களைப் போயி நல்லவர்னு நம்பினேனே..என்ன ரமேஷ் இப்படிப் பண்ணிட்டிங்க.." - ஏறக்குறைய அழும் நிலைக்கு வந்துவிட்டாள்.. திடீரென தான் வித்தியாசமாக நடந்து கொண்டதை உணர்ந்தாள்.

சுதாரித்துக் கொண்ட ரமேஷ்,காயத்ரியின் மன நிலையை சற்று உணர ஆரம்பித்தான். ஆனால் அவனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.. இரண்டு முறை ஏற்பட்டக் கசப்பான அனுபவமே இதற்குக் காரணம்..

"காயு..இது பூஜா..பெங்களூர்ல எனக்குக் கிடைச்ச ஒரு நல்ல friend..அவங்க ஏன் call பண்ணாங்கன்னா.."

"Oh ப்ரெண்டா(friend)..ரமேஷ் இனியும் நான் தாமதிக்க விரும்பலை.." உணர்வு பூர்வமாகப் பேச ஆரம்பித்து விட்டாள்..

"ரமேஷ், உங்களுக்குத் தெரியுமா..நீங்க செகண்ட் டைம் ப்ரபோஸ் பண்ணிட்டுப் போனதுக்கப்புறம் நான் உங்களை எவ்வளவு மிஸ் பண்ணேன்னு.. நீங்க எனக்காகக் கணேசன் சாரைத்  திட்டினது,எனக்காக தீபக் கிட்டே பேசி விஜய் டீவிலே பாட நம்ம காலேஜ் சார்பா என்னையே செலக்ட் பண்ண வைச்சது,உங்களுக்குக் கொஞ்சமும் பிடிக்காத சேத்தன் பகத்(Chetan Bhagat) கிட்டே,எனக்குப் பிடிக்குமென்கிற ஒரே  காரணத்துக்காக ஆட்டோகிராப் வாங்கிக் கொடுத்ததுன்னு நிறைய விஷயத்த யோசிச்சி உங்களை எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா?"

ரமேஷ் ஏதோ சொல்ல முற்பட்டான்..ஆனால்,தானாக அமைந்த இந்த நல்ல சந்தர்ப்பத்தைத் தன் தவளை வாயால் பேசிக் கெடுத்துவிட வேண்டாமென நினைத்து அமைதியானான்,காயத்ரி தொடர்ந்தாள்,

"காலேஜ் ஸ்ட்ரைக் அப்போ நடந்த பிரச்சனையிலே நான் சொன்னதை என் கிளாஸ்மேட்ஸ்(classmates) கூட நம்பலை.. நீங்க மட்டும் தானே என் சைடுல நின்னிங்க..தனியாளா என்னை support பண்ணிங்க..மோடிவேட்(Motivate) பண்ணிங்க.. நீங்க மட்டும் அப்போ என் கூட இல்லாம இருந்திருந்தா நிலைமை எவ்வளவு மோசமா போயிருக்கும்? Infact நான் place ஆனப்போ உங்களுக்குச் சொல்லனம்னு எவ்வளவு ஆசையாய் இருந்தேன் தெரியுமா..?"

காயத்ரி தன்னைப் பற்றி இப்படி அன்பாகப் பேசி ரமேஷ் என்றுமே கேட்டதில்லை..எல்லையில்லாத மகிழ்ச்சியடைந்த ரமேஷ் பேசினான்...

"ஏன் காயு..என்ன இவ்வளவு பிடிக்குமா உனக்கு? அப்புறமும் எதுக்கு நான் ப்ரபோஸ் பண்ணப்போ அவ்வளவு ஹார்ஷா பேசினே?"

"அன்னைக்கிப் பேசினப்புறம் தான் அது தப்போன்னுத் தோணித்து.. அதுக்கப்புறம் உங்களைப் பற்றிப் பல தடவை யோசிச்சிருக்கேன்..பேசனம்னு நினைச்சாலும் உங்க நம்பர் இல்லை..நீங்க எங்கே போனிங்கன்னும் தெரியல.."

ரமேஷ் காயத்ரியையே பார்த்துக் கொண்டிருக்க,அவள் தொடர்ந்தாள்,

"உங்களைக் கம்பெனியிலே பார்த்த நாளிலேர்ந்து ஏதோ வித்தியாசமா உணர ஆரம்பிச்சேன்..உங்களைப் பார்க்கிறப்போ எல்லாம் நிறையப் பேசணம்ன்னுத் தோணும்..ஆனா என்னமோ தெரியல, பேச்சே வராது.. அதான் தர்ஷன் கூட நிறைய பேசுவேன்..அப்படிப் பேசிக் கொஞ்சம் நார்மலா இருக்கிற மாதிரி manage பண்ணிடுவேன்.. உங்க கிட்டே ஏதாவதுக் கேட்கவும் கொஞ்சம் உறுத்தும்..'என் லவ் மட்டும் வேண்டாம்,ஆனா என்னோட ஹெல்ப் மட்டும் வேணுமான்னுக்' கேட்டுட்டா  என்னப் பண்றது" - அப்பாவித்தனமாகச் சொன்னாள் காயத்ரி.

"காயத்ரி என்னை நீ புரிஞ்சிக்கிட்டது அவ்வளவுத் தானா? நான் உன்னை உயிருக்குயிரா லவ் பண்றேன்.. உனக்குன்னா என்ன வேணும்னா பண்ணுவேனே காயு..உன் மனசுக்குப் பிடிக்காத எதுவும்,எப்போவும் செய்ய மாட்டேன்.. ஒன்னு சொல்றேன் புரிஞ்சிக்கோ, உனக்குப் பிடிக்கலைன்னா, என் காதலையே கூடத் தூக்கி எறிஞ்சிடுவேன் ..உன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்.. உன் மேல  எவ்வளவு பிரியம் வைச்சிருக்கேன் தெரியுமா?"

"தெரியும் :-)..நான் தான் உங்களைப் புரிஞ்சிக்காமப் பல தடவை hurt பண்ணிட்டேன்..ஆனா அவ்வளவும் பொறுத்துக்கிட்டு எனக்கு ஒண்ணுன்னா துடிச்சி போறீங்களே..அன்னைக்கி ராத்திரி என் பைக் ரிப்பேர் ஆனப்போ உங்கக் கண் எவ்வளவு பேசிச்சு..ராத்திரித் தனியா நிற்கிறேனேன்னு ஒரு பதற்றம்,இந்த நிலைமைலேக் கூட உங்களைக் கூப்பிடலையேன்னு ஒரு ஏமாற்றம்,பத்திரமா வீட்டிலே விடனம்னு ஒரு பொறுப்புணர்ச்சி, எல்லாத்துக்கும் மேல ஒரு வித affection.. நான் என்ன அவ்வளவு நல்லவளா..?" - ரம்மியமானக் குரலில் கேட்க,

"Tujh mein rab dikhta hai Yaara mein kya karu(I see my God in you,I don't know what to do :-) ).." - உணர்வு பூர்வமாக லேசான புன்னகையுடன் இந்த இரு வரிகளையும் பாடுவது போலப் பேசினான்.அவள் மிக அழகாக, லேசாகப் புன்னகைத்தாள், நாணத்துடன் தலை குனிந்தாள்,

"இப்போ கூட அந்த தர்ஷன் உன் கிட்டே ப்ரபோஸ் பண்ணலைன்னா ஏன் கிட்டே இவ்வளவுப் பேசி இருக்க மாட்ட இல்லே"

"ஐயோ ரமேஷ்..அது அதோட முடியலே..அவன் சரியான இம்சையா இருக்கான்..அப்பா காலைல வாக்கிங் போறப்போ அவங்கப்பாவ மீட் பண்ண வைச்சிருக்கான்..அவங்க அப்பா பேச்சு வாக்கிலே தர்ஷனுக்கு என்ன கொடுக்கச் சம்மதமான்னு கேட்டிருக்காரு..எங்கப்பாவும் நல்ல இடம் தானே என்னம்மா சொல்றேன்னு கேட்கிறார்.. கிட்டத்தட்ட பத்து நாளா பயங்கரமான மெண்டல் டார்ச்சர் அனுபவிச்சிட்டேன்..என்ன பையன் அவன்..இப்படி ஏன் விருப்பம் கூட இல்லாம அப்பா கிட்டே பேசி இருக்கான்?"

"சரி விடு அவனை ஏன் திட்டுறே..உன்னை மிஸ் பண்ண யாருக்குத் தான் மனசு வரும்..இனிமே இதைப் பற்றி நீ கவலைப்படாதே..எங்கப்பாவும் காலைல வாக்கிங் போவாரு"

"சார் நிலைமை சீரியஸ்..காமெடி பண்ணிடாதிங்க..ஆமா என்னவாம் உங்க ப்ரெண்டுக்கு(friend)?"

"யாருக்கு?"

"அதான் 'nothing is more important for me..I will be there in Bangalore' அவளுக்கு.."

"ஐயோ காயு,அன்னைக்கி அவளுக்கு கல்யாணம்..மறக்காம ரிசப்ஷனுக்காச்சு வந்துடுன்னு கூப்பிட்டா"

காயத்ரி சிரித்தாள்,

"இன்னும் சொல்லவே இல்லையாம்,அதுக்குள்ள 1008 கேள்வி வேற"

"என்ன sollanam" - போலியான குழப்பத்துடன் காயத்ரி கேட்க,"இப்போவாச்சு சொல்லு காயு..ப்ளீஸ்..கிட்டத்தட்ட இரண்டரை  வருஷம் வெயிட் பண்ணிட்டேன்.."

காயத்ரி முகமெல்லாம் மலர்ந்தது..கண்களில் பளிச்சென்று ஒரு ஒளி தோன்றியது..ரமேஷைப் பார்த்தாள்..அருகில் வந்தாள்..

"I love you" - மீண்டும் அந்த ரம்மியமான குரலில் அழகாகச் சொன்னாள்..

இது உண்மைதான்..கனவில்லையே..சொன்னது நீ தானா - ரமேஷ் மனதில் நினைத்துக் கொண்டான்.

"ரமேஷ் உங்களை இறுக்கமாக் கட்டிக்கணம் போல தோணுது.."

"நான் வேண்டாம்னா சொல்லப் போறேன்" 

இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டார்கள்,

"I love you Gayu "


(முற்றும்)

2 comments:

Unknown said...

Sooper! Finally happy ending :)

Harish.M said...

@Jagan - so finally u r happy it seems :P