Friday, September 7, 2012

சொன்னது நீ தானா ? - 2

முதல் பாகத்தை இங்கே படிக்கலாம் (click here)

ந்நிலையில் காயத்ரிக்கு கேம்பஸ் இன்டர்வியு மூலம் ரமேஷ் பணி புரியும் அதே நிறுவனத்தில் வேலை கிடைத்தது. இதை காயத்ரி ரமேஷிடம் தெரிவிக்க விரும்பினாள்.ஆனால் ரமேஷ் சென்னை தொலைபேசி எண்ணை உபயோகிப்பதில்லை.அவனது பெங்களூர் எண்ணை  பிரேம் மற்றும் ஒரு சில நண்பர்களுக்கே கொடுத்திருந்தான்.

காயத்ரிக்கு ரமேஷை பிடிக்காமல் இல்லை.அவர்கள் இருவரும் கல்லூரி நாட்களில் நெருக்கமான நண்பர்கள் என்றே சொல்லலாம்.ரமேஷ் மற்றவர்களை விடவும் காயத்ரியிடம் அதிகம் அக்கறை செலுத்துவதையும் அன்பு காட்டுவதையும் உணர்ந்தான்.தன் காதலை வெளிப்படுத்தினான்.ரமேஷ் இரண்டு முறை தன் காதலை வெளிப்படுத்தியது,இனி தன்னை தொந்தரவு செய்ய வேண்டாமென கேட்டுக் கொண்டதும் இன்று வரை தொடர்பு கொள்ளாதிருப்பது என அனைத்து விஷயங்களையும் சில நிமிடங்கள் நினைத்துப் பார்த்தாள்.

"ஒரு ஆத்திரத்திலே சொல்றது தான்..இனிமே இந்த எண்ணத்தோட என் கூட பேசாதேன்னு..மூணு மாசமாச்சு ஒரு மெசேஜ் இல்லை,போன் கால் இல்லை,மெயில்,சாட் எதிலேயும் காண்டாக்டே இல்லை டா அவர் கிட்ட இருந்து" - தன் நண்பன் ஒருவனிடம் உண்மையான வருத்தத்துடன் சொன்னாள்.

"நீ தான் அவரைப் பிடிக்கலைன்னு சொல்லிட்டல்ல..இம்சை விட்டதுன்னு நினைச்சிக்கோ.. "

"இப்படி அவரை மரியாத குறைவா பேசாதே.."

"தோ பாரடா..கோவம் எல்லாம் வருது..உள்ளுக்குள்ள லவ் இருக்கு,ஆனா ப்ரொபோஸ் பண்ணா ரிஜக்ட் பண்ணிட வேண்டியது.."

"இப்போ நான் அவரை லவ் பண்றேன்னு யார் சொன்னது? இடியட் மாதிரி பேசாதே..எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்.. அவர் மேல எனக்கொரு மரியாதையும் உண்டு..ஆனா அதை நீ லவ்வுன்னு புரிஞ்சிகிட்டா அதுக்கு நான் பொறுப்பில்லை"

"இந்த பொண்ணுங்களே இப்படித்தான்..உன்னை மாதிரி பொண்ணுங்க இருக்கிறதாலத் தான் முக்கால்வாசி பசங்க டாஸ்மாக்கே கதின்னு இருக்கானுங்க.."...தனது நண்பனின் இந்த பேச்சுக்கு காயத்ரி அதிக முக்கியத்துவம் தரவில்லை.பணியில் சேர ஆவலாய் இருந்தாள். அழைப்புக்காகக் காத்திருந்தாள்.

சில மாதங்களுக்குப் பிறகு,

"பிரேம்!!!"

"ரமேஷ்!!சொல்லு டா..எப்படி இருக்க..என்ன மச்சி ரெண்டு மூணு மாசமா போன்,மெசேஜ் எதுவும் இல்லை..நானா போன் பண்ணினாலும் அப்புறம் பேசறன்னு சொல்லி கட் பண்ணிடுவ..என்ன ஆச்சு?அவ்வளவு பிசியா"

"அதெல்லாம் ஒன்னும் இல்லை டா..எனக்கு இங்க அசைன்மென்ட் ஓவர்..ப்ரொஜெக்ட்ல இருந்து ரிலீஸ் பண்ணிட்டாங்க..வீக்கென்ட் இங்க friends கூட என்ஜாய் பண்ணிட்டு சண்டே நைட் சென்னைல இருப்பேன்.."

"டேய் சீக்கிரம் வரலாம்ல..அம்மா உன்ன ரொம்ப எதிர்பார்த்துகிட்டு இருக்காங்க டா.."

"முக்கியமான விஷயம் மச்சி..நான் வரப்போற விஷயத்த அங்க யார் கிட்டேயும் சொல்லிடாதே.. அம்மா-அப்பாக்கு இது ஒரு 'ஸ்வீட் சர்ப்ரைசா' இருக்கட்டும்..bye dude..சண்டே நைட் மறக்காம ஸ்டேஷனுக்கு வந்துடு "

"என்ன ஆச்சு இந்த பையனுக்கு?மூணு மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் ஜகத்குரு ஜக்கி வாசுதேவ் ரேஞ்சுக்கு தத்துவமா சொல்லி தீர்த்தான்..இப்போ என்னடான்னா என்ஜாய் பண்ணிட்டு வர்றேன்னு சொல்றான்..ம்ஹ்ம்ம்.. ஒரு வேளை பெங்களூர்ல ஏதாவது புது பிகர் செட்டாயிருக்குமோ ?" - இவ்வாறு யோசித்தான்.. பிறகு,"ச ச நம்மாளு அவ்வளவு வொர்த் இல்லை..",என நினைத்துக் கொண்டான்.

ஆறு மாதத்திற்கு பிறகு சென்னையை பார்ப்பது ரமேஷுக்கு ஒரு இனம்புரியாத சந்தோஷத்தை ஏற்படுத்தியது. பல நாட்கள் கழித்து சொந்த ஊரைப் பார்க்கும் சந்தோஷத்தை வார்த்தைகளால் வருணிக்க முடியாது.

"Hi dude..Welcome back.."

ரமேஷ் புன்னகைத்தான்.ரமேஷ் கடும் உடற்பயிற்சியின் மூலம் உடல் இளைத்திருப்பது தெரிந்தது.மீசையை ட்ரிம் செய்திருந்தான்.லேசான தாடியுடன் பார்ப்பதற்கு அட்டகாசமாக இருந்தான்.

"என்ன டா போகும்போது தேவதாஸ் மாதிரி இருந்த,இப்போ என்னடான்னா மாடல் ரேஞ்சுக்கு ஆயிட்ட.. ஆனாலும் இந்த ராத்திரி நேரத்திலே அந்த கூலிங் கிளாஸ் தேவை தானா.ரொம்ப ஓவரா இருக்கு டா.."

சட்டென்று ரமேஷுக்கு ஒரு அழைப்பு வந்தது.

"yeah I have reached yaar..On the way to my home.. ya sure sure..thank you thanks a lot"

அழைப்பைத் துண்டித்து விட்டு,லேசாக புன்னகைத்தான்.

"யாரு டா இந்த நேரத்திலே call பண்றது?"

"பூஜா டா..பெங்களூர்ல என்னோட close friend ஆய்ட்டாங்க"

"பசங்க எவனும் க்ளோஸ் ஃபிரெண்டே ஆக மாட்டானா இவனுக்கு.. இவனுக்குன்னு வந்து சேர்றாளுகளே..நமக்கு ஒன்னு கூட செட் ஆக மாட்டேங்குது" - பிரேம் முணுமுணுத்தான்..

"என்ன சொன்னே?" - ரமேஷ் குழப்பத்துடன் கேட்க,

"சும்மா மச்சான்..நீ இல்லாம ரொம்ப போர் அடிச்சிடிச்சி டா..அதான் சொல்லிட்டிருந்தேன்".


ரமேஷின் வீட்டை அடைந்தார்கள்.திடீரென ரமேஷையும் பிரேமையும் ஒன்றாகக் கண்டதும் ரமேஷின் அம்மா இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானார்.

"என்ன டா இப்படி சொல்லாம கொள்ளாம திடு திப்புன்னு வந்து நிக்கிற?" - அம்மா அப்பா இருவரும் கேட்டார்கள்.

"சும்மா உங்களுக்கு சர்ப்ரைஸ் தரலாமேன்னு தான்.. சரி லேட் ஆய்டிச்சு தூங்குங்க..காலைல ஆபீஸ்ல ரிப்போர்ட் பண்ணனம்"..

ரமேஷின் இந்த நடவடிக்கை அவன் அம்மாவிற்கு சற்று வித்தியாசமாய் பட்டாலும்,அது அவளுக்கு சந்தோஷத்தையே தந்தது..பெங்களூர் செல்லும் முன் சோகமே உருவாய் இருந்த தன் மகனை,எப்போதும் இப்படி சந்தோஷமாகப் பார்க்கவே விரும்பினாள்.ஆறு மாத காலத்தில் ரமேஷ் எவ்வளவோ மாறி இருந்தான்.

மறு தினம் வழக்கம் போல அலுவலகுத்துக்குச் சென்று தனது பெங்களூர் ப்ராஜெக்ட் குறித்த தகவல்களை விவரித்தான்.சரியாக ஒரு மணிக்கு மதிய உணவு சாப்பிட 'cafetaria' சென்றான். தான் கொண்டுவந்திருந்த சாம்பார் சாதத்தை சாப்பிட்டுக் கை கழுவினான்.

"ஹேய் ரமேஷ்..இங்க இந்த பக்கம் பாருங்க..பின்னாடி திரும்புங்க"

மிக அழகான ஒரு பெண் குரல்..ரமேஷுக்கு நன்கு பழக்கப்பட்டக் குரலும் கூட..

"ஹேய் காயு!!!!"

"பரவாயில்லையே பேர் எல்லாம் ஞாபகம் வச்சிருக்கீங்க"

"ஹலோ..நான் கூட பழகற யாரையும் மறக்கிறதில்லை..ஆனா என் கூட பழகினவங்க தான் என்னை ஞாபகம் வைச்சிக்கிறதில்லை"

"ஹேய் இன்னும் இப்படி பெருசா வசனம் பேசி மொக்கை போடறதை விடலையா நீங்க?"

இந்த கேள்வி ரமேஷுக்கு சற்று ஏமாற்றத்தைத் தந்தது..இருந்தாலும் கட்டுப்படுத்த முடியாமல் சிரித்து விட்டான்.காயத்ரியும் சிரித்துக் கொண்டிருக்க,தன்னை அறியாமல் ரமேஷ் அவளின் அழகிய சிரிப்பை ரசித்துக் கொண்டிருந்தான்.

"ம்ம்ம்..சரி நீ எப்படி இங்கே..இங்க place ஆன விஷயத்தக் கூட சொல்லவே இல்லைல என் கிட்ட?" - ரமேஷ் கேட்டான.

"எப்படி சொல்ல முடியும்?உங்க நம்பருக்குக் கால் பண்ணா 'switched off'ன்னு வருது.. உங்க பிரெண்ட்ஸ் கிட்டயும் புது நம்பர் இல்லைன்னு சொல்லிட்டாங்க.."

"ஒரு மெயில் அனுப்பி இருக்கலாம்ல? சரி அதை விடு..என்ன சாப்பிடற? ஜூஸ்? மில்க்ஷேக்?"

"இல்லை எதுவும்.."

"It's ok..நான் pay பண்றேன்..OCல வாங்கித் தந்தா வாங்கிக்க மாட்டியா என்ன?"

"அசிங்கப்படுதிட்டிங்க..சரி போகட்டும் விடுங்க, மூனு சாக்லேட் மில்க்ஷேக் சொல்லுங்க"

"மூனு எதுக்கு? ஒன்னு உனக்கு,ஒன்னு எனக்கு,இன்னொன்னு?"

"எவ்வளவு நேரம் வெயிட் பண்றது? மூன்றாவது ஜூஸ் இவனுக்குத் தான்..ஹி இஸ் தர்ஷன,my friend"

சற்றே உயரமாக,சிவப்பாக கையில் iPhoneல் தப்புத் தப்பாக அரை குறை ஆங்கிலத்தில் மிக தீவிரமாக ஏதோ பேசிக்கொண்டே வந்தான்.கையில் தங்க மோதிரம், விலையுயர்ந்த கடிகாரம், கழுத்தில் தங்கச் சங்கிலி அணிந்திருந்தான். ரமேஷ் அவனை ஏற்ற இறக்கமாகப் பார்த்தான். அவனைப் பற்றி சில கணக்குகள் போட்டான்.உடனே அவனது கவனம் காயத்ரியின் பக்கம் திரும்பியது.தன்னை இவனிடம் என்னவென்று அறிமுகப் படுத்தப் போகிறாள் என்று ஆவலாகப் பார்த்தான்.ஆனால் காயத்ரி அவனை அறிமுகப்படுத்தவே இல்லை.

"என்ன மில்க்ஷேக் ஆர்டர் பண்ணலையா இன்னும்?" - ரமேஷைப் பார்த்துக் கேட்டாள்.

"ஹேய் யார் இவரு..மில்க்ஷேக் வாங்கித்தான்னு சொல்றியே?" - தர்ஷன்

"ஓ உனக்கு தெரியாதுல்ல,இவர் தான் ரமேஷ்..என் காலேஜ் சீனியர்" - அறிமுகப்படுத்தினாள். இது ரமேஷுக்கு சற்று ஏமாற்றமளித்தது.He is my friend என்று அறிமுகப்படுத்தி இருந்தால் கூட சற்று ஆறுதலாக இருந்திருக்கும். இருந்தும் காயத்ரி தன்னோடு பேசுவதே அதிகம் என எண்ணிக்கொண்டான். மூவரும் மில்க்ஷேக் குடித்தார்கள். வழக்கம் போலவே காயத்ரி நிறைய பேசினாள்.ஆனால் ரமேஷ் அளவாகப் பேசினான்.

"என்ன நீங்க மணிரத்னம் படத்திலே வர்ற மாதிரி one word answer கொடுத்துட்டிருக்கீங்க? எப்போவும் போல நல்லா பேசலாம்ல?"

ரமேஷ் லேசாக புன்னகைத்தான்.பிறகு பேசினான்,

"எந்த பிளாக்?"

"5th பிளாக், நீங்க?'

"1st பிளாக்..1st  பிளாக் 3rd  floor ரெண்டு பெரும் ஒரே ப்ரொஜெக்டா?"

"ஆமாம்..இப்போ training போயிட்டிருக்கு..ஆமாம் இந்த..." - காயத்ரி ஏதோ சொல்ல முற்பட்டால்,ரமேஷ் குறுக்கிட்டு,

"ஹேய் ஹேய்.. எனக்கு டைம் ஆச்சு..ஒரு கால் இருக்கு..நம்ம இன்னொரு நாள் மீட் பண்ணலாம்..bye bye" - என வேகமாக புறப்பட்ட ரமேஷை நிறுத்தினாள், "உங்க நம்பர் கொடுத்துட்டுப் போங்க" - எனக் கேட்டாள்.

"9843323034 " - நம்பர் கொடுத்து விட்டு வேகமாகச் சென்றான்.


அவனுடைய இந்தச் செயல் காயத்ரிக்குச் சற்று வித்தியாசமாய்ப் பட்டது.பிறகு இவர்கள் அடிக்கடி சந்தித்துப் பேச ஆரம்பித்தார்கள். உணவு இடைவேளையில் பெரும்பாலும் ரமேஷும் இவர்கள் ஒன்றாகவே உண்பார்கள்.

ரமேஷுக்கு காயத்ரி மீது எப்போதும் ஒரு தனி பாசம் உண்டு.அவள் அவனதுக் காதலை ஏற்காவிட்டாலும் கூட, ரமேஷுக்கு அவள் மீதிருந்த பாசம் சற்றும் குறையவில்லை.ஒரு முறை சாதரணமாக ஏதோ கேட்கப் போக,காயத்ரி சற்று  வருத்தமடைந்தாள்.இதை அறிந்த ரமேஷ் அவளை விடவும் வேதனயடைந்தான். அதை நினைத்து ஒரு சில நாட்கள் தூங்காமல் கூட இருந்ததுண்டு.அவனுக்குக் காயத்ரி என்றால் உயிர்.அவளுடைய ப்ராஜெக்ட் பற்றி சில விபரங்களைச் சேகரித்துக் கொண்டான். அவள் அறிமுகப்படுத்திய தர்ஷனைப் பற்றியும் விசாரித்ததில்,அவன் தவறானவன் இல்லை என்று புரிந்து கொண்டான். இவை அனைத்தும் காயத்ரிக்குத் தெரியாமல் செய்தான்.தெரிந்தால் தன்னுடன் பழகவே மாட்டாள் எனப் பயந்தான்.

காயத்ரியின் நடவடிக்கைகளில் ஒரு சில மாறுதல்கள் ஏற்பட்டிருப்பதை மறுப்பதற்கில்லை.ஓரளவிற்கு ரமேஷ் அவளிடம் பேச வேண்டுமென அவள் எதிர்பார்ப்பது புரிந்து கொள்ளக்கூடியதே.ஆனாலும் கூட,தர்ஷனுக்குத் தரும் முக்கியத்துவத்தில் ஒரு விழுக்காடு கூட ரமேஷுக்குக் கிடைப்பதில்லை.

"பெங்களூர்ல இருந்தப்போ இவளை மறக்க முடியலன்னா கூட மற்ற விஷயத்திலாவது கவனம் செலுத்த முடிஞ்சுது.."

"கரெக்டு..பூஜா மாதிரி ஒரு friend இருந்தா எந்தக் கவலையும் தெரியாதுல்ல" - கேலியாகப் பேசினான் பிரேம்.

"நீ கொஞ்ச நேரம் மூடிகிட்டிருக்கியா?நானே கடுப்புல இருக்கேன்.."

"Cool down Cool down.."

"என்னாலையும் control பண்ண முடியலடா..நான் லவ் பண்ணப் பொண்ணுக்  கூட வேற ஒருத்தன் கடலை போடறதப் பார்த்தா பத்திகிட்டு வருது"

"நீ ஏன் சும்மா இருக்க?உனக்கு அவ மேல அவ்வளவு ஆசை இருந்தா நீயும் பேச வேண்டியது தானே?"

"நான் பேசினா எங்க மச்சான் மதிக்கிறா"

"நீ அவ கிட்டயும் போயி என் கூட பேசற மாதிரி மாலிக் கபூர் பத்தியும் மொத நாள் ராத்திரி படிச்ச ஏதோ ஒரு கதைய சொன்னா கேட்பாளா?ஏதோ நான் கேட்கறன்னா அது வேற..அதுக்காக எல்லாரும் என்னை மாதிரி தியாகிகளா இருப்பாங்களா என்ன?"

"உன்னைப் போயி ஒரு நண்பன்னு நம்பி பேசறன் பாரு..அதே மாலிக் கபூர் பற்றி அந்த தர்ஷன் பேசினா கை தட்டி ரசிக்கிறா டா..இந்த விதி இருக்கே என் வாழ்க்கைல மட்டும் ஏன் தான் இப்படி 3 stump நட்டு வச்சி batting bowling fieldingன்னு எல்லாத்தையும் தானே பண்ணி இப்படி விளையாடுதோ.. எங்கேயோ இருந்த என்னை மறுபடி இதே லொக்கேஷனுக்கு வர வைச்சி,அவளுக்கும் அங்கயே ப்ராஜெக்ட் கிடைக்க வைச்சி மறுபடியும் அவ கிட்ட எதையாவது எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற வைக்குது.. "

"டேய் சரி விடு..டென்ஷன் ஆகாதே"

"ஆனா ஒன்னு மச்சி..உன் மனசுக்கு புடிச்சவங்க உன் பாசத்தைக் கொஞ்சம் கூட புரிஞ்சிக்காம இருக்கிற வேதனை இருக்கே,நரக வேதனை டா.."

"நீ ஏன் மறுபடி அவளுக்கு ப்ரபோஸ் பண்ணக் கூடாது"

"ஏதோ ஒரு முடிவுல இருக்கடா நீ..அவ கூட நான் friendlyயா பழகறேன்னு நம்பிப் பேசிகிட்டிருக்கா..இன்னொரு வாட்டி ப்ரபோஸ் பண்ணா மூஞ்சிலையே முழிக்க முடியாது"

"அப்போ ஏண்டா அவளையே நினைச்சிட்டிருக்க இப்படி..உனக்கென்ன கிறுக்கா புடிச்சிருக்கு?"

"என்ன டா பண்றது.. T ராஜேந்தர்(TR) எழுதின மாதிரி, 'விருப்பமில்லாப் பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன்'.. "



 பிறகு ஒரு நாள் ரமேஷ் கிளம்ப சற்று நேரமாகி விட்டது.சுமார் இரவு 10 மணி இருக்கும்.அன்று வானிலை மிகக் குளிர்ச்சியாக இருந்ததால் ரமேஷ் வழக்கமாக செல்லும் குறுக்குப் பாதையில் செல்லாமல்,சுற்றிக் கொண்டு போனான். இது போல இயற்கையை ரசிப்பது ரமேஷுக்கு மிகவும் பிடிக்கும்.அப்போது சாலையில் அவன் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.உடனடியாக வண்டியை நிறுத்திவிட்டுச் சென்றான்.

"காயத்ரி..என்ன ஆச்சு..இந்த நேரத்திலே இங்க என்ன பண்றே?Any problem?"

"பைக் நின்னுடுச்சி..திரும்ப ஸ்டார்ட் பண்ணவே முடியல..பக்கத்திலே யாராவது ஹெல்ப்புக்குக் கூப்பிடலாம்னு பார்த்தாலும் பயமா இருக்கு..இங்க யாரையும் காணோம்"

"எவ்வளவு நேரமா இங்கேயே நிக்கிறே?"

"Half an hour "

உடனடியாக ரமேஷ் பிரேமை அழைத்தான்."பிரேம் இங்க ரெண்டு பைக் இருக்கு..நைட் உன்னோட ரூம்ல இருக்கட்டும்.. உடனே கிளம்பி வா..மற்றதை நேரிலே சொல்றேன்" - என அவர்கள் இருந்த இடத்தின் விபரங்களைச் சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.

"ஏன் காயு,இவ்வளவு நேரமா இங்க இருக்கிறதுக்குப் பதில் உன் 'best friend' அந்த தர்ஷனை வரச்சொல்லி இருக்கலாம்ல?"

"அவனுக்கு phone பண்ணி வரச்சொன்னேன்..ஆனா அவன் 'நண்பன்' நைட் ஷோ பார்த்துகிட்டு இருக்கானாம்.. அதனால வர முடியாதுன்னு சொல்லிட்டான்.."

"சரி விடு..இதுக்குத் தான் இந்த விஜய் fans கூட எல்லாம் சேராதேன்னு சொல்றது..எங்க கேக்கற நீ" - என அவன் சொன்னதும் வாய் விட்டுச் சிரித்து விட்டாள் காயத்ரி..பிறகு,

"ரமேஷ்,எதுக்கு ரெண்டு பைக்கும் உங்க frienda கொண்டு போகச் சொன்னீங்க?உங்க பைக் நல்லாத்தானே இருக்கு?"

"அது இருக்கு,ஆனா நீங்க என் கூட பைக்ல வந்துட்டுத் தான மறு வேலை பார்ப்பீங்க?இப்படி ஒரு situationல கூட என்னைக் கூப்பிடனம்னு தோனலைல உனக்கு? உன்னை என்னால கொஞ்சம் கூட புரிஞ்சிக்க முடியல"

பிரேம் தன் ரூம்மேட்டோடு வந்தான்."இவங்க தான் அந்த காயத்ரியா.. 'Glad to meet you' எனக் கை கொடுக்க முற்பட்டான் பிரேம்..ரமேஷ் சற்று கடுமையாகப் பார்ப்பதை உணர்ந்ததும்,கையை விளக்கிக் கொண்டான்.. "It's ok.. நான் இன்னொரு நாள் intro வாங்கிக்கிறேன்..கடமை தானே நமக்கு முக்கியம்..வண்டியைத் தள்ளுடா போலாம்.."

இருவரும் ஆட்டோவில் ஏறினார்கள்.

"பரவாயில்லை நான் போயிருவேன் ரமேஷ் உங்களுக்கெதுக்கு வீண் ஷ்ரமம்"

"இந்த சீன் போடறத விட்டுட்டு உள்ளே போ..வீட்டிலே யாருக்காச்சு phone பண்ணி வரச்சொல்லி இருக்கலாம்ல"

"வீட்டிலே பாட்டி மட்டும் தான் ரமேஷ் இருக்காங்க..அப்பா-அம்மா ரெண்டு பெரும் கும்பகோணம் போயிருக்காங்க.. நல்ல வேளை நீங்களாச்சு வந்தீங்களே..எப்படி thanks சொல்றதுன்னே தெரியல.."

மீண்டும் மீண்டும் அவள் தன்னை அன்னியமாக நினைத்துப் பேசுவது ரமேஷுக்குப் பிடிக்கவில்லை..ஆனாலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு காயத்ரியுடன் தனியாக இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததில் அவனுக்கு பெருமகிழ்ச்சி.. அடிக்கடி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்...இருவர் மனதிலும் பல விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்தன என்பதை அவர்களின் கண்கள் தெளிவாக்கின.."சார் இந்தத் தெருவுல எந்த வீடு சொன்னீங்க?" - ஆட்டோக்காரன் குரல் கேட்டு இருவரும் தன்னிலைக்கு வந்தார்கள்,"அந்த Santro car நிக்குதுல,அதுக்கடுத்த வீடு..."

அவளை வீட்டில் பத்திரமாகச் சேர்த்து விட்ட திருப்தியில் வீட்டிற்கு வந்து படுத்தான்.எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த நிகழ்வு அவனுக்கு அன்றிரவு நிம்மதியானத் தூக்கத்தைக் கொடுத்தது.ஆனால் அவன் எது நடந்து விடக் கூடாது என பயந்தானோ அதுவே நடக்கப் போகிறது என்று தெரியாமல் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருக்கிறான்.

                                                                                          -தொடரும்  
 

No comments: