Saturday, January 16, 2016

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்அன்றே சொன்னார்.. நாடோடி மன்னன் படத்தில் வரும் பாடல்வரி தான் இது.. 'என்னை நம்பாமல் கெட்டவர்கள் நிறைய பேர் உண்டு,நம்பி கேட்டவர் இன்று வரை இல்லை' என்று வசனம் பேசினார். தன் இறுதி நாட்களில் சரியாக பேச முடியாத நிலையிலும், நரிக்குறவர்களுக்கு வீடு கட்டித் தர வேண்டும் என்றார். அரசு நிதியில் சத்துணவு திட்டத்தை அமல்படுத்தினார்.  அண்ணா என் தலைவர் காமராஜர் என் வழிகாட்டி என்று சொன்னார்,சொன்ன சொல்படி நின்று காட்டினார். காமராஜர் கனவு கண்ட சத்துணவு திட்டத்தை அமல்படுத்தி வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். slate  தூக்கும் பிள்ளைகளை plate தூக்க வைத்துவிட்டார் எம்.ஜி.ஆர் என்று கேலி பேசியவர்கள் பிறகு அதில் ஒரு முட்டை,பிறகு இரண்டு முட்டை என்று திட்டத்தை விரிவாக்க முடிந்ததே தவிர அத்திட்டத்தை ரத்து செய்ய முடியவில்லை. உலக வங்கியால் பாராட்டப்பட்ட இத்திட்டாம் உலக வங்கியின் மாதிரி திட்டங்களில்(model scheme) ஒன்றாக இன்றளவும் உள்ளது.

108 திட்டத்தை தான் தான் அமல்படுத்தியவர் என்று இப்போது மார்தட்டிக் கொள்கிறவர்கள் மறக்கும்/மறைக்கும் விஷயம் என்றால் இத்திட்டத்தை எண்பதுகளிலேயே எம்.ஜி.ஆர் அறிமுகபடுத்தி விட்டார் என்பது தான்.பின்னர் வந்த திமுக அரசு அத்திட்டத்தை கிடப்பில் போட்டதே.ஊழலற்ற நிர்வாகத்தைக் கொடுத்தார் என்பதற்காக அன்று திமுக-காங்கிரஸ் கூட்டாக இவர் ஆட்சியை கலைத்தார்களே. பாராளுமன்ற தேர்தலில் குறைவான இடங்களைப் பெற்றதால் எம்.ஜி.ஆர் வீழ்ந்தார் என்று நினைத்த தீய சக்திகளுக்கு,அடுத்து வந்த தேர்தலில் மக்கள் தக்க படம் புகட்டினார்களே. மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் மீண்டும் முதல்வரானாரே. 77இல் ஆட்சிக்கு வந்தவர் தன் கடைசி மூச்சு வரை முதல்வராகவே வாழ்ந்தார்.

இன்று தாழ்த்தப்பட்டவர்களுக்காக பாடுபடும் முகமாக தங்களைக் காட்டிக்கொள்ள நினைக்கும் கருணாநிதி,காங்கிரஸ் அன்று செய்ததென்ன? பாபு ஜெகஜீவன் ராம் பிரதமராவதைத் தடுக்கத் தானே நினைத்தனர். அவர் பிரதமராக எம்.ஜி.ஆர் தானே ஆதரவு தெரிவித்தார். தாழ்த்தப்பட்டவர் பிரதமராகக் கூடாது என்பதற்காகவே பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசமே கொடுக்காமல் பாராளுமன்றத்தைக் கலைத்தவர் அன்றைய காங்கிரஸ் ஆதரவு ஜனாதிபதி நீளம் சஞ்சீவ ரெட்டி.

சினிமாக்காரன் அரசாள கூடாது, சினிமா கவர்ச்சியை வைத்து மக்களை ஏமாற்றுகிறான் என்றெல்லாம் சொன்னார்களே? ஜாதிப் பெயரைச் சொல்லி மக்களை பிளவுபடுத்தும் அய்யோக்கியத்தனத்தைக் காட்டிலும் சினிமா கவர்ச்சி மூலம் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்காக பணியாற்றிய எம்.ஜி.ஆர் தானே உத்தமர்? இவர் ஆட்சியில் தானே ஜாதி சங்கங்கள் அழைத்துப் பேசப்பட்டன? மரங்களை வெட்டி மக்களை ஏமாற்ற முயன்றவர்கள் எம்.ஜி.ஆரின் முன் எடுபடாமல் தானே போனார்கள்.கலியுகக் கர்ணன் என்ற அடைமொழியைப் பலரும் பயன்படுத்துகிறார்கள். எம்.ஜி.ஆருக்குத்தானே அந்த பட்டம் கச்சிதமாகப் பொருந்தும்? ஒரு முறை ஒரு காவல் துறை அதிகாரிக்கு எம்.ஜி.ஆர் தோட்டத்திலிருந்து அழைப்பு வந்தது.அதிகாரி பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தார்." நீங்கள் இங்கே பணியிலிருப்பது தெரிந்தது. சென்ற முறை நீங்கள் மிகவும் விரும்பி சாப்பிட்ட கத்தரிக்காய் குழம்பு சமைக்கப்பட்டுள்ளது. வாத்தியார் உடனே உங்களை நினைவுகூர்ந்து அழைத்து வரச்சொன்னார். சாப்பிடுங்கள்" - என்று தோட்டத்தில் இருப்பவர்கள் தகவல் கூறி உணவளித்தார்கள். தன் அதிகாரிகளையும் மக்களையும் மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்பவர் அல்லவோ உண்மையான தலைவர்?

வெள்ளம் பாதித்த போது தயங்காமல் மழை நீரில் இறங்கி ஆறுதல் கூறி உதவிகளைச் செய்தவர் எங்கள் எம்.ஜி.ஆர். 'ஐயா நீங்க இவ்வளவு தூரம் வரணமா?' என்று அன்போடு மக்கள் சொன்னார்களே,அது தானே எம்.ஜி.ஆர் தன் வாழ்நாளில் சம்பாதித்த மிகப்பெரிய சொத்து.

2015 வரை தமிழகத்தில் நக்சலைட்டு தொல்லைகள் இருந்ததில்லை. இப்போது கூடங்குளம் உதயகுமார் கட்சி தொடங்கப்போவதாக தகவல்கள் வருகின்றன,அதனால் 2015 வரை என்று வைத்துக் கொள்வோம். நக்சல் தொல்லை இல்லாமல் போனதற்கு காரணம் எம்.ஜி.ஆர் தானே? காவல் துறைக்கு முழு அதிகாரம் கொடுத்து நக்சல் தொல்லைகள் இல்லாதவாறு செய்தவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தான்.

இவர் தமிழர் அல்ல என்றார்கள்.ஆனால் இவர் தமிழர்களுக்கு செய்ததில் கால் பங்கு கூட இவரை மலையாளி என்று விமர்சித்தவர்கள் செய்ததில்லை. ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் பேர்வழி என்று ஏமாற்றும் போலிகளுக்கிடையே உணர்வு பூர்வமாக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளித்து அவர்கள் பிரச்சினையை தீர்க்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்தவர், பிறகு அவர்களின் பாதை மாறவே அவர்களை ஆதரிப்பதை நிறுத்திக் கொண்டார்.அவர்களுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டையும் எடுத்தார்.

இவர் படங்கள் இப்போது வெளியானாலும் திரை அரங்குகளில் பெரும் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கு காரணம் அவரின் முகராசியும் அதிர்ஷ்டமும் மட்டுமல்ல.சினிமாவிலும் சரி பொது வாழ்விலும் சரி அவர் மக்களின் எதிர்பார்ப்புகளை சரியாக புரிந்து வைத்ததே அவரின் அசாத்திய வெற்றிக்குக் காரணம். பாரதிராஜா, அலைகள் ஓய்வதில்லை படத்தை போட்டுக் காட்டிய போது, எம்.ஜி.ஆர் 'இதற்கு இன்னொரு முடிவு(climax) வைத்திருப்பீர்களே?' என்று கேட்டதும் அசந்து போனார் பாரதிராஜா. ஏனென்றால் அவர் மற்றொரு முடிவு படமாக்கிய விஷயம் ஒருவருக்கும் தெரியாது.

இன்றும் பல கிராமங்களில் எம்.ஜி.ஆர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று நினைக்கும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.பிரச்சாரத்திற்கே செல்லாமல் ஒரு தலைவனால் வெற்றி பெற முடியுமென்றால் அது தானே உண்மையான மக்கள் செல்வாக்கு? ஒரு குறிப்பிட்ட ஜாதியை அவதூறாகப் பேசுவதையே திராவிடத்தின் கொள்கை என்று அரசியல் செய்தவர்கள் மத்தியில் 'தாய் மூகாம்பிகையின் உருவில் என் தாயைக் காண்கிறேன்' என்று சொல்லி இந்த போலி பகுத்தறிவுவாதிகளின் வாயை அடித்தாரே. தான் பதவியில் இருந்த காலம் வரை எந்த ஒரு சமூகத்தையும் இழிவாகப் பேசாமல் அரசியல் செய்தாரே, தமிழகத்தில் அது எவ்வளவு பெரிய சாதனை?

அன்றே சொன்னார்.. நாடோடி மன்னன் படத்தில் வரும் பாடல்வரி தான் இது.. 'என்னை நம்பாமல் கெட்டவர்கள் நிறைய பேர் உண்டு,நம்பி கேட்டவர் இன்று வரை இல்லை' என்று வசனம் பேசினார். தன் இறுதி நாட்களில் சரியாக பேச முடியாத நிலையிலும், நரிக்குறவர்களுக்கு வீடு கட்டித் தர வேண்டும் என்றார். அரசு நிதியில் சத்துணவு திட்டத்தை அமல்படுத்தினார்.  அண்ணா என் தலைவர் காமராஜர் என் வழிகாட்டி என்று சொன்னார்,சொன்ன சொல்படி நின்று காட்டினார். காமராஜர் கனவு கண்ட சத்துணவு திட்டத்தை அமல்படுத்தி வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். slate  தூக்கும் பிள்ளைகளை plate தூக்க வைத்துவிட்டார் எம்.ஜி.ஆர் என்று கேலி பேசியவர்கள் பிறகு அதில் ஒரு முட்டை,பிறகு இரண்டு முட்டை என்று திட்டத்தை விரிவாக்க முடிந்ததே தவிர அத்திட்டத்தை ரத்து செய்ய முடியவில்லை. உலக வங்கியால் பாராட்டப்பட்ட இத்திட்டாம் உலக வங்கியின் மாதிரி திட்டங்களில்(model scheme) ஒன்றாக இன்றளவும் உள்ளது.

108 திட்டத்தை தான் தான் அமல்படுத்தியவர் என்று இப்போது மார்தட்டிக் கொள்கிறவர்கள் மறக்கும்/மறைக்கும் விஷயம் என்றால் இத்திட்டத்தை எண்பதுகளிலேயே எம்.ஜி.ஆர் அறிமுகபடுத்தி விட்டார் என்பது தான்.பின்னர் வந்த திமுக அரசு அத்திட்டத்தை கிடப்பில் போட்டதே.

ஊழலற்ற நிர்வாகத்தைக் கொடுத்தார் என்பதற்காக அன்று திமுக-காங்கிரஸ் கூட்டாக இவர் ஆட்சியை கலைத்தார்களே. பாராளுமன்ற தேர்தலில் குறைவான இடங்களைப் பெற்றதால் எம்.ஜி.ஆர் வீழ்ந்தார் என்று நினைத்த தீய சக்திகளுக்கு,அடுத்து வந்த தேர்தலில் மக்கள் தக்க படம் புகட்டினார்களே. மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் மீண்டும் முதல்வரானாரே. 77இல் ஆட்சிக்கு வந்தவர் தன் கடைசி மூச்சு வரை முதல்வராகவே வாழ்ந்தார்.

இன்று தாழ்த்தப்பட்டவர்களுக்காக பாடுபடும் முகமாக தங்களைக் காட்டிக்கொள்ள நினைக்கும் கருணாநிதி,காங்கிரஸ் அன்று செய்ததென்ன? பாபு ஜெகஜீவன் ராம் பிரதமராவதைத் தடுக்கத் தானே நினைத்தனர். அவர் பிரதமராக எம்.ஜி.ஆர் தானே ஆதரவு தெரிவித்தார். தாழ்த்தப்பட்டவர் பிரதமராகக் கூடாது என்பதற்காகவே பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசமே கொடுக்காமல் பாராளுமன்றத்தைக் கலைத்தவர் அன்றைய காங்கிரஸ் ஆதரவு ஜனாதிபதி நீளம் சஞ்சீவ ரெட்டி.

சினிமாக்காரன் அரசாள கூடாது, சினிமா கவர்ச்சியை வைத்து மக்களை ஏமாற்றுகிறான் என்றெல்லாம் சொன்னார்களே? ஜாதிப் பெயரைச் சொல்லி மக்களை பிளவுபடுத்தும் அய்யோக்கியத்தனத்தைக் காட்டிலும் சினிமா கவர்ச்சி மூலம் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்காக பணியாற்றிய எம்.ஜி.ஆர் தானே உத்தமர்? இவர் ஆட்சியில் தானே ஜாதி சங்கங்கள் அழைத்துப் பேசப்பட்டன? மரங்களை வெட்டி மக்களை ஏமாற்ற முயன்றவர்கள் எம்.ஜி.ஆரின் முன் எடுபடாமல் தானே போனார்கள்.

கலியுகக் கர்ணன் என்ற அடைமொழியைப் பலரும் பயன்படுத்துகிறார்கள். எம்.ஜி.ஆருக்குத்தானே அந்த பட்டம் கச்சிதமாகப் பொருந்தும்? ஒரு முறை ஒரு காவல் துறை அதிகாரிக்கு எம்.ஜி.ஆர் தோட்டத்திலிருந்து அழைப்பு வந்தது.அதிகாரி பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தார்." நீங்கள் இங்கே பணியிலிருப்பது தெரிந்தது. சென்ற முறை நீங்கள் மிகவும் விரும்பி சாப்பிட்ட கத்தரிக்காய் குழம்பு சமைக்கப்பட்டுள்ளது. வாத்தியார் உடனே உங்களை நினைவுகூர்ந்து அழைத்து வரச்சொன்னார். சாப்பிடுங்கள்" - என்று தோட்டத்தில் இருப்பவர்கள் தகவல் கூறி உணவளித்தார்கள். தன் அதிகாரிகளையும் மக்களையும் மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்பவர் அல்லவோ உண்மையான தலைவர்?

வெள்ளம் பாதித்த போது தயங்காமல் மழை நீரில் இறங்கி ஆறுதல் கூறி உதவிகளைச் செய்தவர் எங்கள் எம்.ஜி.ஆர். 'ஐயா நீங்க இவ்வளவு தூரம் வரணமா?' என்று அன்போடு மக்கள் சொன்னார்களே,அது தானே எம்.ஜி.ஆர் தன் வாழ்நாளில் சம்பாதித்த மிகப்பெரிய சொத்து.

2015 வரை தமிழகத்தில் நக்சலைட்டு தொல்லைகள் இருந்ததில்லை. இப்போது கூடங்குளம் உதயகுமார் கட்சி தொடங்கப்போவதாக தகவல்கள் வருகின்றன,அதனால் 2015 வரை என்று வைத்துக் கொள்வோம். நக்சல் தொல்லை இல்லாமல் போனதற்கு காரணம் எம்.ஜி.ஆர் தானே? காவல் துறைக்கு முழு அதிகாரம் கொடுத்து நக்சல் தொல்லைகள் இல்லாதவாறு செய்தவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தான்.

இவர் தமிழர் அல்ல என்றார்கள்.ஆனால் இவர் தமிழர்களுக்கு செய்ததில் கால் பங்கு கூட இவரை மலையாளி என்று விமர்சித்தவர்கள் செய்ததில்லை. ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் பேர்வழி என்று ஏமாற்றும் போலிகளுக்கிடையே உணர்வு பூர்வமாக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளித்து அவர்கள் பிரச்சினையை தீர்க்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்தவர், பிறகு அவர்களின் பாதை மாறவே அவர்களை ஆதரிப்பதை நிறுத்திக் கொண்டார்.அவர்களுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டையும் எடுத்தார்.

இவர் படங்கள் இப்போது வெளியானாலும் திரை அரங்குகளில் பெரும் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கு காரணம் அவரின் முகராசியும் அதிர்ஷ்டமும் மட்டுமல்ல.சினிமாவிலும் சரி பொது வாழ்விலும் சரி அவர் மக்களின் எதிர்பார்ப்புகளை சரியாக புரிந்து வைத்ததே அவரின் அசாத்திய வெற்றிக்குக் காரணம். பாரதிராஜா, அலைகள் ஓய்வதில்லை படத்தை போட்டுக் காட்டிய போது, எம்.ஜி.ஆர் 'இதற்கு இன்னொரு முடிவு(climax) வைத்திருப்பீர்களே?' என்று கேட்டதும் அசந்து போனார் பாரதிராஜா. ஏனென்றால் அவர் மற்றொரு முடிவு படமாக்கிய விஷயம் ஒருவருக்கும் தெரியாது.

இன்றும் பல கிராமங்களில் எம்.ஜி.ஆர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று நினைக்கும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.பிரச்சாரத்திற்கே செல்லாமல் ஒரு தலைவனால் வெற்றி பெற முடியுமென்றால் அது தானே உண்மையான மக்கள் செல்வாக்கு? ஒரு குறிப்பிட்ட ஜாதியை அவதூறாகப் பேசுவதையே திராவிடத்தின் கொள்கை என்று அரசியல் செய்தவர்கள் மத்தியில் 'தாய் மூகாம்பிகையின் உருவில் என் தாயைக் காண்கிறேன்' என்று சொல்லி இந்த போலி பகுத்தறிவுவாதிகளின் வாயை அடித்தாரே. தான் பதவியில் இருந்த காலம் வரை எந்த ஒரு சமூகத்தையும் இழிவாகப் பேசாமல் அரசியல் செய்தாரே, தமிழகத்தில் அது எவ்வளவு பெரிய சாதனை?

எம்.ஜி.ஆர் இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் ஜாதி அரசியல் தலைதூக்கி இருக்காது. தான் வாழ்ந்த கடைசி நொடி வரை மக்களைப் பற்றியே சிந்தித்த எம்.ஜி.ஆருக்காக எழுதப்பட்ட 'நீங்க நல்லா இருக்கணம் நாடு முன்னேற இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற' என்ற பாடல் எத்தனை உண்மையானது?

"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்" - எம்.ஜி.ஆருக்காக கவிஞர் வாலி எழுதியது 

No comments: