Thursday, November 10, 2011

மாஸ் மீடியா(Mass Media)

  மாஸ் மீடியா -1
Start Camera Action



"மதன் என்ன எதுக்காக இப்படித் தூக்கிட்டு வந்தே?"

"கீதா நல்லா யோசிச்சிப் பாரு கீதா,நாம எப்படியெல்லாம் பழிகினோம்..என்ன விட்டுட்டு எப்படி கீதா இன்னொருத்தனுக்கு கழுத்த நீட்ட சம்மதிச்சே?"

"முட்டாள் மாதிரிப் பேசாதே..உன்ன பாத்தா நல்லா அழகா இருந்த,என்ன பாத்து நீ சிரிக்கவே நானும் சிரிச்சேன்,நீ செலவு பண்ணவே நானும் பார்க்கு பீச்னு உன் கூட சுத்தினேன்..நீ காதலிக்கிறேன்னு சொன்ன,நானும் ஒரு ஜாலிக்கு அப்படி சொன்னேன்..அதுக்காக கல்யாணம் பண்ணிக்கோன்னு டார்ச்சர் பண்ணுறியே?
நா கட்டிக்கப் போறவரு ஒரு Software Engineer.. மாசம் அறுபதாயிரம் சம்பாதிக்கிறார்.."

"அப்போ பணம் தான் எல்லாமா கீதா?"

"Ofcourse உன்ன கட்டிக்கிட்டு உனக்கும் உன் குடும்பத்துக்கும் வடிச்சிக் கொட்றது பெட்டரா இல்ல foreign ல சொகுசா வாழறது பெட்டரா?"

"கீதா இதான் உன் முடிவா?"

"என்ன மிரட்டுறியா நான் யார்...." பேசி முடிப்பதற்குள் மதன் தன் இடையிலிருந்தக் கத்தியை எடுத்துக் கீதாவைச் சரமாரியாகக் குத்துகிறான்..

"ஏண்டி என்ன ஏமாத்திட்டு வெளிநாட்டுக்குப் போயி வாழப்போரியா?பாத்தியா இப்போ உன்ன வேற உலகத்துக்கே அனுப்பிட்டேன்..ஹஹஹா ஹஹஹா"

"மதன்..." என முனகிக்கொண்டே கீதா விழுந்தாள்..

Cut it. Take Ok.

என்று இயக்குனர் சந்தோஷ் சொல்லி முடித்தார்.

இப்படி ஒரு காட்சி "காதலித்தப் பொழுதுகள்" என்னும் படத்துக்காக படமாக்கப்பட்டது.

நண்பர்களே ஒரு திடுக்கிடும் அறிமுகம் தரும் முயற்சியில் தான் பதிவின் ஆரம்பத்தில் அந்தக் காட்சியை விவரித்தேன். முயற்சி வெற்றியா தோல்வியா என்பதை வாசகர்கள் தான் சொல்ல வேண்டும். மாஸ் மீடியா - இது சினிமாவைப் பற்றி நான் எழுதும் ஒரு கற்பனைக் கதை.சினிமாவைப் பற்றிய என் கற்பனைகளைத் தொகுத்து ஒரு கதையாக எழுதும் முயற்சி தான் இந்த மாஸ் மீடியா.இந்தக் கதையில் வரும் சம்பவங்களும் கதாபாத்திரங்களும் முழுக்க முழுக்கக் கற்பனையே.யாரையும் குறிப்பிடுவன அல்ல.

மீண்டும் மாஸ் மீடியாவுக்குச் செல்வோம்...

"யோவ் பாத்து யா பாம்புக்கேதாச்சு ஒண்ணுன்னா பாம்பாட்டி கடிச்சிடுவான்.. குமாரு, ஹீரோ வந்துட்டாரா.. producer என் கழுத்த நெறிக்கிறான் யா..அந்தாளோட பீ.ஏக்கு phone போடு.." என பரபரப்பாக சுற்றிக்கொண்டிருந்தான் ப்ரொடக்ஷன் மேனேஜர் மணி..

"சார் இங்க மணின்னு.." என இழுத்தான் ஸ்ரீதர்.. "நான் தான் பா மணி..ஊருக்குப் புதுசா இன்னா விஷயம் என்னயத்தேடி வந்திருக்க?"

"ஆமாம் சார் நான் தென்சாரத்துல இருந்து வர்றேன்..சந்திரன் அய்யா இந்த லெட்டெர உங்க கிட்டக் கொடுக்கச் சொன்னார்"

"அட நம்ம ஊர் தானா நீயும்.." கடிதத்தைப் படித்தப் பிறகுச் சற்றுக்  கடுப்பானாலும்,அதை வெளியில் காட்டாமல் "ஏன் யா சந்திரன் சார் சொன்னாருன்னு ஸ்டைலா பைய மாட்டிகிட்டுச் சென்னைக்கு வந்துடறதா..நீங்க வெளியில இருந்துப் பார்க்கிற சினிமா வேற ஆனா இங்க நடக்கறது வேற..டைரக்டர் ஆகனன்ற தப்பான ஆசைய இப்போவே விட்டுடு..அதெல்லாம் ரொம்ப கஷ்டம் தம்பி"

"சார் நீங்க அப்படி சொல்லக்கூடாது சந்தோஷ் சார் கிட்ட என்ன அசிஸ்டண்டா சேர்த்து விட வேண்டியது உங்க பொறுப்பு"

"அவனே ஒரு சைக்கோ..அவன் கிட்ட சிபாரிசுனு போனா உன்னோட சேர்த்து என்னையும் விரட்டி விட்டுடுவான் யா..சினிமால டைரக்டர் ஆகறது அவ்வளவு சுலபமில்ல தம்பி..உன்ன மாதிரி தினம் ஆயிரக்கணக்கானவங்க கிளம்பி வர்றாங்க..யாரோ ஒருத்தர் ரெண்டு பேர் தான் ஜெயக்கிறாங்க.."

"அந்த ஒருத்தர் ரெண்டு பேரா நான் இருக்கலாம்ல சார்"

"பாத்தாப் படிச்சவன் மாதிரி இருக்க..வந்தோமா ரெண்டு நாளிருந்தோம ஊற சுத்திப் பாத்தோம போனோமா இருப்பியா அதை விட்டுட்டு..உனக்கு இப்போ நான் சொன்னா புரியாது..ஒரு வேளை சாப்பாட்டுக்கு அலையரப்போத் தான் புரியும்.. ஏம்பா அந்த ஹீரோய்னோட நாயிக்கு பிஸ்கட் வாங்கிட்டு வந்துட்டீங்கல்ல..அப்புறம் அந்தம்மா இதக்காரணம் காட்டியே ஊரக்கூட்டுவாங்க" என அலறிக்கொண்டே சென்று விட்டார் மணி..

தன்னையும் தன் கதையையும் மட்டுமே நம்பிக் கிராமத்திலிருந்துக் கிளம்பி வந்த ஸ்ரீதருக்கு இதுச் சற்று வித்தியாசமான அனுபவமாகத்தானிருந்தது..இந்த ஊரில் எங்கே தங்குவது?யாரைப் பிடிப்பது ஒன்றுமே விளங்கவில்லை.. அவன் மனம் மிகவும் குழம்பி இருந்தது..ஒரு விஷயத்தில் மட்டும் தீர்மானமாக இருந்தான்..தன்னை ஒரு திறமையான இயக்குனர் என்று நிரூபித்துக் கொள்ளாமல் ஊருக்குத் திரும்புவதாயில்லை அவன்.அடுத்து என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கும்போது,அவன் தோள்பட்டையைத் தொட்டது ஒரு கை..ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் நின்று கொண்டிருந்தார்

தன்னைக் காதர் என்று அறிமுகப் படுத்திக் கொண்ட அந்தப் பெரியவர், "தம்பி இவனுங்க கெடக்குறானுங்க..நீ என் கூட வா உனக்கு நான் ஒரு வழி காட்டுறேன்." என்றார்.

ஸ்ரீதர் சற்று சந்தேகத்துடன் அவரைப் பார்த்தான்.அவன் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட அந்தப் பெரியவர்,

"தம்பி நீ என்ன நினைக்கிறன்னு புரியுது.உன் கிட்ட சிங்கிள் டீக்குக் கூட நான் காசு கேட்க மாட்டேன். எனக்கு இளையராஜாவைத் தெரியும் டைரக்டர் ஷங்கரைத் தெரியும்னு வர்றவங்கள ஏமாத்திப் பணம் பறிக்கிறவன் இல்ல நான்.இங்க துணை நடிகர்களோட ஒரு கோஷ்டிக்கு நான் தான் ஏஜண்டு.உன் முகத்துல ஒரு நல்ல களை இருக்குப்பா. ஏதோ மனசுல பட்டதைச் சொன்னேன்."

ஸ்ரீதருக்குச் சென்னையில் உதவக்கூடிய நண்பர் என்று சொல்லிக்கொள்ளும்படி யாருடைய பெயரும் நினைவுக்கு வரவில்லை. பத்து நிமிடம் பின்னாலிருந்துத் தான் பேசுவதைக் கவனித்து விட்டு உதவ முன் வந்தப் பெரியவரை நம்பவும் மனம் வரவில்லை.

"இந்த டைரக்டர் இல்லைன்னா என்ன?இன்னும் எவ்வள்ளவோ பேர் இருக்காங்க.ஊர்ல இருந்து வர்றப்போ என் திறமைய நம்பித்தான் வந்தனே தவிர அந்த மணிய நம்பியோ இல்ல மத்தவன நம்பியோ இல்லை.இருந்தாலும், நீச்சல் தெரியனம்னா முதல்ல தண்ணீல குதிக்கனம்.சினிமான்னா என்னன்னு தெரிஞ்சிக்க இந்த காதர் பாய் மாதிரி ஆளுங்க நிச்சயம் தேவை" - இத்தனையும் ஒரு சில வினாடிகளில் ஸ்ரீதரின் மனதில் ஓடியது.இப்படி எண்ணிக்கொண்டே ஸ்ரீதர், அந்தப் பெரியவருடன் அரை மனதுடனே தான் நடந்தான்.

                                                     ***************************

ஸ்டுடியோவில் "அத்தை மகள் ஆனந்தி" படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.சென்டிமென்ட்டாக விநாயகர் கோவில் முன்பு ஒரு தேங்காய் உடைக்கப்பட்டுப் படத்துக்குப் பூஜையும் போட்டாகி விட்டது. கதாநாயகன் சரண். பத்துப் படங்களே நடித்திருந்தாலும், பெரும்பாலானவை வெற்றிப்படங்கள்..கடைசி  இரண்டும் சுப்பர் ஹிட்.ஹாட்ரிக் வெற்றியை குறிவைத்து காதல்,ஆக்ஷன், செண்டிமெண்ட், நகைச்சுவை என அனைத்தும் கலந்த ஒரு ஜனரஞ்சகமானப் படமாக "அத்தை மகள் ஆனந்தி" அமையும் என்பது கோடம்பாக்கத்தில் நிலவும் கருத்து.

இன்றைய தேதிக்குச் சரணும் ஒரு டாப் ஹீரோ.இது போன்ற படங்களை விரைவாக முடிப்பதில் வல்லவரான நாராயணன் தான் இந்தப் படத்தை இயக்குகிறார்.இயக்குனர் செட்டைக் கவனிப்பதில் மும்முரமாக இருந்தார்.சரண் இயற்கையாகவே நல்ல சிவந்த நிறம்.சராசரி ஐந்தரை அடி உயரம்.பார்ப்பவர்களை உடனேக் கவரக்கூடிய வசீகரமான முகம்.பல நூறு நடனக்கலைஞர்களுடன் ஆடும் அறிமுகப் பாடலுக்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தான்.

அப்போது ஸ்பாட்டுக்கு  வந்துச் சேர்ந்தார் மாலினி,படத்தின் கதாநாயகி.அலங்கரிக்கப்பட்ட ஜவுளிக்கடைப் பொம்மையைப் போல் இருந்தார்.அவருடன் அவருடைய அம்மாவும் லொகேஷனுக்கு  வருவது வழக்கம்.சில நேரங்களில் மாலினியைவிட அவருடைய அம்மா இளமையாகவும் அழகாகவும் தோன்றுவார்.காட்சிக்கு ஏற்ற உடையும் ஒப்பனையும் செய்து கொள்ள இருவரும் கேரவனுக்குச் சென்று விட்டார்கள்.

"டைரக்டர் சார்,இன்னைக்கி இவங்க கூட நடிக்க வேண்டிய சீன் ஏதாச்சு இருக்கா என்ன?" - கேட்டான் சரண்.

"இல்லை நீங்க ரெண்டு பெரும் சேர்ந்து நடிக்கற மாதிரி சீன் எதுவும் இன்னைக்கி இல்லை. இருந்தாலும் அவங்களுக்கொரு ஹாய் சொல்லிக் கை கொடுத்துருங்களேன்" - நாராயணன் 

"இவ கூட கொஞ்சம் distance keep up பண்ணனம் சார்.ஒரு சின்ன வேண்டுகோள்,இந்தப் படத்துல முத்தக் காட்சி ஏதாச்சு இருக்கா?"

"இது வரைக்கும் அப்படி எதுவும் ஸ்கிரிப்ட்ல இல்லை" , என்று கோபமாகச் சொன்னார் நாராயணன்.

"ஸ்கிரிப்ட் அப்படியே இருக்கட்டும்.தப்பித்தவறி கூட kissing scenes வெச்சிடாதிங்க"

"என்னய்யா இது வித்தியாசமா இருக்கே? பொதுவா ஹீரோக்களெல்லாம் கிஸ்ஸிங் சீன் வைக்கச்சொல்லித்தான் டார்ச்சர் பண்ணுவாங்க..நீ வேற மாதிரி சொல்றியே?"

"உங்க கிட்ட சொல்றதுக்கென்ன.செட்டுக்கு வெளிய நீங்களும் நானும் தான் தோஸ்தாச்சே..படு லோக்கல் brand தம்மடிக்கிரா சார்.'நினைவுகளில் நீ' படத்துல நடிச்ச ஒரு க்ளோஸ்(close) ஷாட்டுக்கே நான் பட்டக் கஷ்டம் எனக்குத்தானேத் தெரியும். Atleast பாக்குப்போட்டுகிட்டாச்சு வரச் சொல்லனம் இனிமே"

"இதுகள எல்லாம் வச்சிக்கிட்டு எப்படித்தான் படமெடுத்து முடிக்கப்போறனோ" என நினைத்துக் கொண்டார் நாராயணன்.

                                                     ***************************

டப்பிடிப்பு ஒருபுறம் நடந்துக்கொண்டிருக்க தயாரிப்பாளர் கண்ணப்பனைப் பார்க்க அப்பாஇன்ட்மென்ட்(appointment) வாங்கிக் காத்திருந்த ராணியை உள்ளே அழைத்தார் தயாரிப்பாளர்.அப்பாவித்தனமானத் தோற்றம் கொண்ட ராணி, சராசரி உயரம், மாநிறம்,மிகவும் ஒல்லி என்றோ அல்லது மிகவும் பருமனான உடற்கட்டு என்றோ சொல்ல முடியாத அளவுச் சரியான உடல்வாகுக் கொண்டிருந்தாள்.சாதாரணமான ஒரு இளஞ்சிவப்பு(pink) நிறச் சுடிதார் அணிந்திருந்தாள், பதினெட்டு வயதே நிரம்பிய ராணி.

"சார்,என் பேரு ராணி. உங்கப் படத்துல நடிக்கச் சான்ஸ் கேட்டு இன்டர்நெட்ல போட்டோ எல்லாம் அனுப்பியிருந்தேன். இந்த நேரத்துக்கு இந்த இடத்துக்கு வரச்சொன்னார் சார் உங்க பீ.ஏ."

கண்ணப்பன் வெள்ளை நிறச் சட்டையும் வேஷ்டியும் அணிந்திருந்தார். பார்ப்பதற்கு ஒரு தூய்மையான பக்திமான் போலக் காட்சியளித்தார்.இத்தனை ஆண்டுகளாகச் சினிமாத்துறையில் 'பலவிதமான' வேலைகளும் பார்த்து விட்டு, இன்று சொந்தமாகப் படம் தயாரிக்குமளவுக்கு 'வளர்ந்திருக்கிறார்'.இது அவருடைய முதல் படம்.

"ஒ நீ தான் அந்த ராணியா.வெரி குட் வெரி குட்.இப்படிப் பாத்ததும் ஹீரோயின் கேரக்டர் உனக்கு செட் ஆகுமா ஆகாதான்னுச் சொல்ல முடியாதேம்மா"

"வேற என்ன சார் செய்யணம்" - அடக்கமாகக் கேட்டாள் ராணி.

"நீ எந்த ஊரும்மா?"

"திருச்சி சார்"

"சரி ஸ்க்ரீன் டெஸ்ட் எடுக்கணம்.இப்போ ஷூட்டிங்க்(shooting) ஓடிட்டிருக்கு. நான் கொஞ்சம் பிஸி.நீ வேணும்னா சாய்ந்திரம் என்ன officeல வந்துப் பாரேன்.அங்கேயே இன்னொரு photo session கூட வச்சிக்கலாம்"

"எத்தன மணிக்கு சார்"

" 'சாய்ந்திரம்'  ஒரு எட்டு மணி போல வாயேன்" 

தான் ஒரு நடிகையாகப்  போகிற சந்தோஷத்தில் விடைபெற்றுச் சென்றாள் ராணி.



                                                                                                                                (தொடரும்..) 

9 comments:

Anand said...

Start Camera Action..U started it in a nice way. I knw u have a special interest towards mass media. ella edathulayum character neraya vechirka paathiya anga nikkara nee..expecting ur 2nd part soon..

Harish.M said...

@Anand - Thanks for commenting dude.. Yeah I love 'Mass Media'.. Keep watching this space,second part will be done soon :-)

N.Amirtha Deepan said...

Machi super da...Super aah eluthi iruka.. ur story keeps me to read entirely in a interseting way.. then nee peru vachi irukura kadha paathiratha vere yaarayavathu imitate panni irukiya?? waiting for ur next post soon :)

Anonymous said...

Gokul:

Oru Balachander padathoda effect therinjithu... seekiramaa second part release pannu....!!!

Anonymous said...

Gokul:

Oru Balachander padathoda effect therinjithu... seekiramaa second part release pannu....!!!

Brindha said...

nice ..... :)

Harish.M said...

@Amirtha Deepan - Thanks for your feedback..I have not imitated any 'individual' through my character..

Thanks..

Harish.M said...

Gokul - thanks :D

Harish.M said...

@Brindha - Thanks for commenting