Thursday, November 17, 2011

மாஸ் மீடியா - 2

மாஸ் மீடியா - 2
                                                         Start Camera Action


முதலாம் பாகத்தைப் படிக்க இங்கே செல்லவும் (click here)


மேடையில் இயக்குனர்கள்,பிரபல கதாநாயகர்கள், கதாநாயகிகள், தயாரிப்பாளர்கள் என பலரும் அமர்ந்திருந்தனர்.'நவீன அகராதி' படப் பாடல் வெளியீட்டு விழா அது.பலப் பிரபலங்கள் இருந்தாலும் நமது நாயகி ஜோயித்தா தான் center of attraction கழுத்திலிருந்துத் துவங்கி முழு உடலையும் மறைக்கும்படி ஒரு கவர்ச்சியானச்  சிவப்பு நிற gown அணிந்து, தலை முடியை ஸ்டைலாகப் பறக்க விட்டபடி அமர்ந்திருந்தாள்.முழு உடலையும் மறைக்கும்படி உடை அணிந்தாலும்,நமது நாயகியைப் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் போதை ஏறும்.அப்படி ஒரு வசீகரமான முகம்.பாடல்களை வெளியிட்டப் பின்பு இயக்குனர் செங்குட்டுவன் மைக்கைப் பிடித்துப் பேசத் தொடங்கினார்.

"நவீன அகராதின்னு தமிழ்ல அழகாத் தலைப்பு வச்சிருக்கீங்க.அதுக்கே மொதல்ல உங்களைப் பாராட்டனம். இப்போல்லாம் தமிழ் சினிமால தமிழப் பார்க்கறதே ரொம்பப்  பெரிய விஷயமா இருக்கு.அதுலயும் நம்ம ஹீரோயின்ஸ் பத்திச் சொல்லவே வேண்டாம்.நூத்துக்கு எண்பது பேரு பாம்பேல இருந்து வந்தவங்க.அவங்க பேச்சுலத் தமிழ் தினம் தினம் வாழுதுடா சாமி.." - என அடுக்கிக்கொண்டே போனார் field out ஆகிவிட்ட இயக்குனர் செங்குட்டுவன்.

இந்தப் பேச்சு ஜோயித்தாவுக்கு ஆத்திரமூட்டியது."இவனுங்களுக்கு இதே வேலையாப் போச்சு.தன்னோட self publicityக்கு they are using Tamil. இவங்களுக்கு படத்துல கண்டபடி டிரஸ் போட்டுக்கனம், அரைகுறையா வந்து ஆடனம்,அசிங்கசிங்கமா டயலாக் பேசனம்,அப்படிப் பேசறப்போ சில பேர் ஒழுங்கான அர்த்தத்தைக் கூடச் சொல்ல மாட்டானுங்க.அப்போ மட்டும் தமிழ் தெரியாத ஹீரோயின் வேணும்.ஆனா stageல பேசறப்போ மட்டும் நாங்க தமிழ் தெரிஞ்சிக்கணம்.தமிழ்ல நாலு வார்த்தைத் தெளிவாப் பேசத் தெரியாதவன் எல்லாம் இங்க டாப் ஹீரோ,தமிழ் சினிமா எடுத்துட்டுப் படம் பூரா English dialogs வைக்கிறவன் இங்க டாப் டைரக்டர்,  அவனுங்கள எல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டானுங்க..ஆனா ஹீரோயின்னாப் போதுமே.. bloody male chauvinism.." - இவ்வளவு ஆத்திரம் உள்ளூரப் புகைந்தாலும் உதட்டில் அந்த வசீகரமானப் புன்னகையை மட்டும் வைத்துக் கொண்டு கேமராக்களுக்குப் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தாள் ஜோயித்தா.உண்மையில் தேர்ந்த நடிகை தான் இவர்.

விழா முடிந்து,ஷூட்டிங்குக்குப் புறப்பட்டாள் ஜோயித்தா.காரில் செல்லும்போது தன் உதவியாளரிடம் அன்றைய நிகழ்ச்சிகளைப்பற்றியும் வேறு சில விஷயங்களைப் பற்றியும் விசாரித்துக் கொண்டேச் சென்றாள்.

"மாலு இன்னைக்கி இந்த ஷூட்டிங் முடிஞ்சப்புறம் என்னோட schedule என்ன?"

"சாயங்காலம் டைரக்டர் வால்ட்டர் உங்க கிட்ட கத சொல்ல அப்பாஇன்ட்மென்ட்(appointment) கேட்டிருக்காரு.உங்களைக் கேட்டுச் சொல்றேன்னு சொல்லியிருக்கேன்"

"Oh no!!.அந்தாளு படத்துல எல்லாம் நடிக்க முடியாது" - ஜோயித்தா

"ஏன் என்னாச்சு?"- மாலு 

"அவர் படத்தோட க்ளைமேக்ஸ்ல ஹீரோ ஹீரோயினோட ரெண்டு கையையும் வெட்டி நெருப்புல போடற மாதிரி scene வச்சிருக்காராம்" 

"அதனால என்ன?தேசிய விருதே கிடைக்கச் சான்ஸ் இருக்கே" 

"ஒரு வேளை உண்மையிலேயே ரெண்டு கையும் வெட்டிட்டா?"

"Don't be silly"

"அந்தாளு செஞ்சாலும் செய்வான் அவனப் பத்தி உனக்குத் தெரியாது..He is a perverted idiot..அது மட்டுமில்ல அவார்டுக்கெல்லாம்(award) own voiceல பேசனம்..நான் பேசற தமிழுக்கும் அதுக்கும் ரொம்ப தூரம் மாலு.. சரி வேற என்ன?"

"அப்புறம் நைட் 'சில்வர் ஸ்டார்' வாசுவோட பார்ட்டி இருக்கு"

"சில்வர் ஸ்டார்.. My foot ..Heroines பின்னாடி நாய் மாதிரி அலையறவனுக்கு சில்வர் ஸ்டார்னு title ஒரு கேடு..Nonsense..சரி எங்க பார்ட்டி?" - என்றாள் ஒரு வித சலிப்போடு.

"அவரோட farm ஹவுஸ்ல"

லொகேஷனுக்கு வந்துச் சேர்ந்தார் ஜோயித்தா..

தன்னுடைய டேக் முடிந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது வேறொரு காட்சிப் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. 

"போராடுவோம் போராடுவோம்" என மாபெரும் தொழிற்சாலைத் திறப்பதைக் கண்டித்து ஒரு ஊரே போராட்டம் நடத்துவதுப் போன்ற காட்சி.சுமார் ஐநூறு பேர் இருப்பார்கள் அந்தக் கூட்டத்தில். அந்த ஐநூறு பேர்களில் ஒருவனாக அமர்ந்து "போராடுவோம் போராடுவோம்" என கத்திக் கொண்டிருந்தான் ஸ்ரீதர்.

காதர் பாய் உதவியால் சென்னையை நன்கு புரிந்து கொண்டான் ஸ்ரீதர்.தற்காலிகமாகத் துணை நடிகனாக நடித்துக் கொண்டிருக்கிறான். முதலில் துணை நடிகனாக நடிக்க மறுத்தாலும் பிறகு மணி சொன்ன வார்த்தைகள் அவன் நினைவுக்கு வந்தன."நீங்க வெளியில இருந்துப் பார்க்கிற சினிமா வேற ஆனா இங்க நடக்கறது வேற". அப்படி என்ன தான் வித்தியாசமிருக்க முடியுமென்று தெரிந்து கொள்ள இந்த வாய்ப்பு உதவும்.மேலும் இயக்குனராக வேண்டுமெனில் ஒரு சில பிரபலங்களின் அறிமுகம் நிச்சயம் தேவை என்பதை உணர்ந்து துணை நடிகனாகச் சம்மதித்தான். துணை நடிகனாக நடித்தாலும் பெரும்பாலும் இயக்குனர்கள் பின்னாலேயே திரிந்துக் கொண்டிருப்பான். எந்த ஒரு முக்கியப் பிரமூகரைச் சந்திக்கும் வாய்ப்பையும் நழுவ விட மாட்டான்.அனைவரிடமும் கலகலவெனச் சகஜமாகப் பழகுவதால் ஸ்ரீதரைக் கோடம்பாக்கத்தில் பலருக்கும் தெரிந்திருந்தது.

"ஆப்பிள் ஜூஸ் கேட்டு எவ்ளோ நேரமாச்சு..குமார் எங்க போனான்னு பாரேன்" என்று குடை பிடித்தவனிடம் சொல்லிக்கொண்டிருக்க ஒரு கை ஆப்பிள் ஜூசை நீட்டியது.

"என்ன மிஸ்டர் ஏற்கனவே நீங்க 'எக்ஸ்ட்ரா' ஆர்டிஸ்ட்டு தான்..இதுல இப்படி எக்ஸ்ட்ரா வேலை எல்லாம் வேறயா"

"ஜோயித்தா மேடம பார்த்துப் பேசற சான்ச தமிழ் நாட்டுல எவனாச்சு மிஸ் பண்ணுவானா"

"நல்லாப் பேசிறியே..உன் பேர் என்ன"

"ஸ்ரீதர்"

                                                     ***************************

டப்பிடிப்புக்கிடையில் கிடைத்த நீண்ட இடைவேளையில் தன புதிய படமொன்றிற்கு இயக்குனரைத் தேர்வுச் செய்யும் பணியில் ஆர்வமாக இருந்தான் சரண்.தன்னைப் பார்க்கக் காத்திருந்த இயக்குனர்களை அழைத்தான்.

"சார் ஒரு அழகான கிராமம் சார்" - என்று இயக்குனர் கதை சொல்ல ஆரம்பித்ததும் சரண் அந்த இயக்குனரை ஏற்ற இறக்கமாகப் பார்த்தான்."அங்க அப்பா,அம்மா ஒரு செல்லமான அக்கானு குடும்பத்தோட இருக்கீங்க.அக்கா மேல உங்களுக்கு அப்படி ஒரு பாசம்.அக்கா காலேஜ்ஜுக்குக் கிளம்ப கொஞ்சம் லேட் ஆயடுச்சின்னதும் நீங்க உடனே குறுக்குப் பாதையில ஓடிப்போய் ஓடிகிட்டிருக்கிற ட்ரெயின்ல ஏறி அதை நிறுத்திடுறீங்க.அக்கா வந்ததும் தான் ட்ரெயின் எடுக்க விடறீங்க..அப்போ பாருங்க..."

"Stop அங்க இருந்து ஹீரோ,அதாவது நான்,சென்னைக்குப் போறேன். சென்னையில இருக்கிற வில்லனுங்கக் கூட சண்ட போடனம்.இதுக்கு நடுவுல அப்போப்போப் பாட்டு வேணும்.அதனால நான் ஒரு பணக்காரப் பொண்ணு கூட romance பண்றன்.கடைசில வில்லன்னுங்கள அழிச்சி,அக்காவக் காப்பாத்தி,ஹீரோயின கல்யாணம் பண்ணிக்கிறேன்..இதான கதை"

"ஆமாம் சார்..இந்தக் கதை எப்படி உங்களுக்கு?அய்யய்யோ என் கதைய யாரோ திருடிட்டாங்க.."

"ஆமாம் படத்தோட பேர் என்ன சொன்னீங்க?"

"விருத்தாசலம். படத்துல ஹீரோ பெரும் அதான் சார்"

"உங்க பேரு?"

"சிற்றரசு"

"நீதானா அந்த சிற்றரசு..மொதல்லயே இதச் சொல்லியிருக்கலாம்ல..இவ்ளோ நேரம் waste பண்ணியிருக்க மாட்டேன் பாரு..இவர் கதைய திருடிட்டாங்களாம்"

"விவேக் அடுத்த ஆளை வரச்சொல்லு" - என்று தன் பீ.ஏவை அதட்டினான்.

"பாஸ் இங்க இருக்கிற எல்லாருமே கிட்டத்தட்ட இதே மாதிரி story தான் சொல்றாங்க. பிரபல டைரக்டர் எம்.எஸ்.நீலகண்டன் உங்களைப் பார்க்க அப்பாஇன்ட்மென்ட் கேட்டிருந்தார்.நைட் பதினொரு மணிக்கு வரச்சொல்லிட்டேன்"

"டாய் இப்போல்லாம் நீயே என்ன கேக்காம எல்லாத்தையும் பண்ண ஆரம்பிச்சிட்டியா"

"இல்லை பாஸ்.அவர் சொன்ன story line ரொம்ப இன்டரஸ்டிங்கா இருந்துச்சு.என்ன பட்ஜெட் தான் தாறுமாறா இருக்கும் அந்த கதைக்கு... ஆனா ஹிட்டானா உங்க மார்க்கெட் எங்கயோ போய்டும்"

"பட்ஜெட் பத்திக் கவலை இல்லை.இன்னைய தேதிக்கு டாப் பிரொடியூசர் தர்மராஜோடப் படம்.அட்வான்சும் வாங்கியாச்சு " என்று சோம்பல் முரித்துக்கொண்டேச் சொன்னான் சரண்.

"தர்மராஜா?பாஸ் He is a dangerous fellow. அவர் கூடப் படம் பண்றது பயங்கர riskனு விஷயம் தெரிஞ்சவங்க சொன்னாங்க"

"Come on விவேக்.இண்டஸ்ட்ரீல இந்த மாதிரி ருமர்ஸ்(rumors) வர்றதெல்லாம் சகஜம் தானே.அவரோட recent releases கூட பெரிய ஹிட் தானே"

"பாஸ் ஆர் யு சீரியஸ்? அந்தப் படமெல்லாம் முதல் ஒரு வாரத்துக்கப்புறம் தியேட்டர்ல ஈயடிக்க ஆரம்பிச்சிடுச்சுவெத்து விளம்பரத்துக்காக ஓடாதப் படத்த ஓடிச்சுன்னு சொல்லிக்கிறான்"

"என்னடா அவரே படம் ஹிட்,இவ்வளவு கலெக்ஷன்னு ஸ்டேட்மென்ட் எல்லாம் குடுத்திருக்காரு"

"பாஸ் நீங்க அட்வான்ஸ் வாங்கிட்டோமேன்னு இப்படியெல்லாம் பேசறீங்கன்னு நல்லா தெரியுது. அந்த producer கூட படம் பண்றது எனக்கென்னவோ நல்லதாப் படலை"

"ஆல்ரைட். நீலு சார் கிட்டப் பேசிட்டு இதைப் பத்தி யோசிச்சிக்கலாம்" - என்று அந்தப் பேச்சை அதோடு நிறுத்தினான் சரண்.விவேக் சொன்னது சரணுக்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தினாலும்,அவருடன் படம் பண்ணுவதில் ஆர்வமாகத்தான் இருந்தான்.

இந்தக் குழப்பம் மனதிற்குள் இருந்தாலும் ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன் என இயக்குனர் சொல்லி முடித்ததும், சரண்  கதாபாத்திரமாகவே மாறிவிட்டான். He is a true professional.


                                                     ***************************


"Had a nice time with you Honey.ஷூட்டிங்ல பார்க்கலாம்.bye bye" - என சொல்லிவிட்டு ஏளனச் சிரிப்போடு உடை மாற்றிக் கொள்ளத் துவங்கினான் வாசு. 'சில்வர் ஸ்டார்' வாசு.


அந்த வளர்ந்து வரும் கதாநாயகி அங்கிருந்துக் கிளம்பிச்செல்ல "என்ன வாசு சார் இன்னக்கி இவங்க தான் எனக்கு அண்ணியா" - என கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான் அவனுடைய காரியதரிசி நரேஷ்.

வாசுவின் முகத்தில் விஷமத்தனமானச் சிரிப்புத் தான் இருந்ததேத் தவிர அவனிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை. மேக்கப் போட வேண்டிய அவசியமில்லாத முகம்.நல்ல உயரம்.கடும் உடற்பயிற்சியினால் கட்டுமஸ்தான உடலைக் கொண்டிருந்தான்.வாசு நாற்பது வயதினன் என்று சொன்னால் நம்புவது சற்றுக் கடினம் தான்.பொதுவாகவே மேக்கப் போட்ட  நடிகர்களின் உண்மையான வயதை ஊகிப்பதென்பது எளிதான காரியமல்ல.

"வாசு சார்,நீங்க வரச்சொன்னதா ஒரு பிரபல டாக்டர் வந்திருக்காரு..என்ன உடம்புக்கேதாச்சும் ?"

"அதெல்லாம் இல்லையா..அடுத்தப் படத்துல six pack போடலாம்னு இருக்கேன்..அதுக்குக் கொஞ்சம் Drugs use பண்ண வேண்டி இருக்கும்னு கேள்விப்பட்டேன்..அதான் அவர consult பண்ணிடலாம்னு வரச்சொன்னேன்"

"அந்தப் படத்துக்கு six pack அவ்வளவு அவசியமா?"

"அவசியம் இல்லைத்தான்..அட இந்த மாதிரி எதாச்சு ஒண்ணுப் பன்னாத்தானப்பா நம்மளையும் 'உழைப்பாளி','hardworker'னு ஒத்துக்கிறாங்க.அது மட்டுமில்ல இப்படி சட்டையக் கழட்டி நடிக்கிறதுல நிறைய advantage இருக்குப் பாரு "

"அப்புறம் நீங்க ஏதோ அரசியலுக்கு வரப்போறதா ஒரு gossip சுத்திட்டிருக்கே.. உங்க ரசிகர்களெல்லாம் கலர் கலரா கொடி வேற வச்சிகிட்டுத் திரியறானுங்க.. இந்த கிசு கிசு எல்லாம் எப்படித்தான் போகுதோ.. பத்திரிக்கைகாரங்க phoneமேல phone போட்டு தொல்லை பண்றாங்க"

"நான் தான்யா அப்படிக் கிளப்பிவிட்டேன்..இல்லாம இல்லாம இருந்து திடீர்னு பேட்டிக் கொடுக்கறது,படம் ரிலீஸ் ஆகர நேரத்துல அரசியல் வதந்திக் கிளப்பி விடறது,கடவுளைப் பழிச்சி ஒரு பாட்டோ இல்ல வசனமோ வச்சி விட்டு அதுல ஒரு controversy கிளப்பி விடறதுன்னு இதெல்லாம் ஒரு வித மார்க்கெட்டிங்க்யா.. இவ்வளவும் என் செகரட்டரி உனக்கேத் தெரியாம செஞ்சேன் பாரு,அது தான் என்னோட சக்சஸ்."

"ஒரு வில்லன் கிட்டக் கூட ஈசியா வேலைப் பாத்துடலாம் ஆனா ஹீரோனு நம்பி ஒரு வில்லங்கத்துக்கிட்ட மாட்டிகிட்டோமே" என தனக்குத் தானே நொந்துகொண்டான். இப்படி அவன் அடிக்கடி நொந்துகொள்வதுண்டு.

"சரி நைட் பார்ட்டிக்கு வேண்டிய ஏற்பாடு பண்ணிடு.. முக்கியமா ஜோயித்தாக்கு சொல்லி அனுப்பிட்டல்ல..?"

"சொல்லியாச்சுங்க..அவங்களும் confirm பண்ணிட்டாங்க"

"குட்..அது தான் நமக்கு,ம்ஹூம் எனக்கு முக்கியம்"


பார்ட்டிக்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்தான் நரேஷ்.
இன்னும் சில மணி நேரங்களில் பார்ட்டித் தொடங்கும்.
                                                                                                                              (தொடரும்)


6 comments:

FR33KiLL said...

//"நீதானா அந்த சிற்றரசு..மொதல்லயே இதச் சொல்லியிருக்கலாம்ல..இவ்ளோ நேரம் waste பண்ணியிருக்க மாட்டேன் பாரு..இவர் கதைய திருடிட்டாங்களாம்"//

he he he...

Anand said...

As expected, 2nd part um nalla iruku..especially andha heroine ஜோயித்தா mind voice, then six pack things la awesome..adhuku nee kudutha reason um super..andha sitrarasu character unmayave chinna pulla thanamala iruku..overall good job dude...

Harish.M said...

@Aravind - thanks for commenting :-)

Harish.M said...

@Anand - Thanks for your encouraging comment :-).. Keep watching this space and support me..

Thanks

Anonymous said...

Gokul
// அவசியம் இல்லைத்தான்..அட இந்த மாதிரி எதாச்சு ஒண்ணுப் பன்னாத்தானப்பா நம்மளையும் 'உழைப்பாளி','hardworker'னு ஒத்துக்கிறாங்க.அது மட்டுமில்ல இப்படி சட்டையக் கழட்டி நடிக்கிறதுல நிறைய advantage இருக்குப் பாரு //

Very thanam... nee yaara pathi solranu yaarukkumey therila... :D

Harish.M said...

கோகுல் - நான் யாரையும் சொல்லலை மச்சி :D இது எல்லாமே ஒரு கற்பனை :D