நண்பர்களே இது எனது கற்பனையில் உருவான ஒரு பதிவு. இதை நகைச்சுவை உணர்வுடன் மட்டும் படிக்குமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.
யமனுக்கும் சித்திரகுப்தனுக்கும் ஆங்கிலம் தெரியுமா, அரசியல் தெரியுமா, கம்ப்யூட்டர் தெரியுமா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யாமல்,இந்த பதிவை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பல ஆண்டுகளுக்கு முன் நடிகர்-இயக்குனர் திரு பிரதாப் போத்தன் அவர்கள் இயக்கத்தில் லக்கி மேன் என ஒரு திரைப்படம் வெளியானது.அந்த திரைப்படம் தான் எனக்கு இப்படி ஒரு பதிவை எழுத வேண்டும் என்கிற யோசனையை தந்தது. சரி கதைக்கு வருவோம்.
காட்சி ஒன்று :
இடம் : நரகம்
யமன் : சித்திரகுப்தா என்ன சமீப காலமாக நம்மிடம் வரும் employees எண்ணிக்கை குறைந்து விட்டது..?
சித்திரகுப்தன் : எல்லாம் recession காரணமாகத் தான் பிரபோ.
யமன் : இதுக்குமா ?
சித்திரகுப்தன் : அது வந்து பிரபு நமது databaseல் ஏதோ கோளாறு இருக்கிறது. அதில் குறிப்பிட்டுள்ளபடி எதுவும் இப்போதெல்லாம் நடப்பதில்லை. அதனால் தான் மானிடர்கள் அதிகம் சாவதில்லை.
யமன் : சி.கு. என்ன சொல்கிறாய்?அதில் குறிப்பிட்டுள்ள அளவுக்கு மரணங்கள் நிகழ்வதில்லை என்றால் நீ எப்படி கணக்கை சரிகட்டுகிறாய்? தினமும் எப்படி பிரம்மாவுக்கு status update கொடுக்கிறாய்?
சி.கு. : எல்லாம் Data manipulation செய்து தான்.
யமன் : அட சண்டாளா பொய் கணக்கா எழுதுகிறாய்?
இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென அந்த இடத்தில் பிரம்மா தோன்றினார்.
"ஐயோ கடவுள்" - என அலறினார் யமன்
பிரம்மா : "யமா,சித்திரகுப்தா பொய் கணக்கா எழுதுகிறீர்கள்? இந்த குற்றத்திற்கு கடும் தண்டனை அளிக்க போகிறேன்"
யமன் : அட பொய் கணக்கெல்லாம் ஒன்னும் இல்லை சுவாமி,சும்மா தமாஷுக்கு சொன்னான் சி.கு.. இல்ல டா சி.கு.?
பிரம்மா : நீங்கள் சொல்வதை எல்லாம் கேட்டு,உங்கள் தவறுக்கு துணை போக என்னை என்ன பூலோகத்தில் உள்ள புலனாய்வுத் துறை போல எண்ணி விட்டாயா? என்னிடம் கணக்கு சரியாக இருக்கிறது.
யமன் : ["சுவாமினாலே கணக்கு கேட்டே சாவடிப்பான் போல" - புலம்புகிறார்]. கணக்கெல்லாம் யாரு சாமி குடுத்தாங்க?
பிரம்மா : நாங்கள் அமைத்த CAG... கணக்கில் பல உயிர்கள் missing .
யமன் : நல்ல வேளை, ஒரு லட்சத்தி எழுபத்தாராயிரம் கோடின்னு அறிக்கை குடுக்காம விட்டாங்களே
பிரம்மா : பேச்சை நிறுத்து யமா. உங்கள் databaseல் எந்த கோளாறும் இல்லை. இங்கு இருக்கும் expertகள் சோதித்து பார்த்தாகி விட்டது. Environment Issue என்று சொல்லி தப்பிக்க பார்க்காதே..
அதில் குறிபிட்டுள்ளது போல் ஏன் நடப்பதில்லை என உடனே பூலோகம் சென்று விசாரித்து விட்டு வா. எனக்கென்னவோ தமிழகத்தில் தான் ஏதோ சூழ்ச்சி நடப்பது போல் தோன்றுகிறது. ஒரு மாதத்திற்குள் கண்டறிய வேண்டும். Deadline meet பண்ணவில்லை என்றால் appraisal, promotion எதுவும் கிடையாது. Your time starts now.
உடனே அந்த இடத்திலிருந்து பிரம்மா மறைந்து விட்டார்.
யமன் : சி.கு முன்பு ஒரு முறை இப்படித்தான் பிரம்மச்சுவடியை கீழே போட்டாய்,பூலோகம் போக வேண்டி இருந்தது. புத்தகம் கொடுத்தால் தான் தொலைத்து விடுகிறாய் என கம்ப்யூட்டர் வாங்கி கொடுத்தேன்,அதிலும் இப்படி சொதப்பி மீண்டும் பூலோகத்திற்கே செல்ல வைத்து விட்டாய்.
சி.கு. : அட விடுங்க பாஸ், நாம மட்டும் எப்போ தான் onsite போறதாம்? இப்படி ஏதாச்சு சான்ஸ் கிடைச்சா தான் உண்டு.
யமன் : தோம் தாத்தா!!
காட்சி: இரண்டு
இடம் : நகரம்
யமன் : சித்திரகுப்தா நன்றாக பார்த்துக்கொள், இது தான் 'Bay of Bengal'..நல்ல வேளை நமக்கு பறக்கும் சக்தியாவது விட்டு வைத்தாரே அந்த பிரம்மா..
சி.கு : ஆமாம் ஆமாம் இல்லை என்றால்,நாம் Air India விமானத்தில் தான் பயணம் செய்ய வேண்டி இருக்கும்.
யமன் : சி.கு அதில் எல்லாம் சென்றால் pilot பாதி வழியில் ஃப்ளைட்டை(flight)
நிறுத்தி விட்டு தம் அடிக்க சென்று விடுகிறார்களாம்.நாம் கிங்க்ஃபிஷரில்(Kingfisher) செல்வோம்.. அதில் தான் ஹன்சிகா நமக்கு 'பாராஷூட்' தருவார்..
சி.கு : பிரபு,இந்த கோல்கட்டா நகரத்தை பாருங்கள்.கேவலம் ஒரு கேளிக்கை போட்டியில்(IPL) வெற்றி பெற்றவர்களுக்கு மாபெரும் பாராட்டு விழா, சற்று சுமாராகவாவது பட்ஜெட் போட்ட ரயில்வே மந்திரியை பதவி நீக்கம் செய்து விட்டார்கள்..இதை வைத்து ஒரு சித்திரமே வரையலாம் போல் தோன்றுகிறது.
யமன் : சி.கு. இப்படி எல்லாம் பேசாதே..இதை கூட இங்கே ஒட்டு கேட்பார்கள்..பிறகு மமதா பேனர்ஜி உன்னை சிறையில் அடைத்து விடுவார்.
டில்லியை கடந்து வரும்போது :
யமன் : சி.கு - யார் இந்த மனிதர்? அந்த அம்மையார் திட்டும்போதும் சரி,அவரது நண்பர் பாராட்டும்போதும் சரி, அந்த கோட் அணிந்த ஆசாமி ஏதோ ஆர்வமாக பேசிக்கொண்டிருக்கும்போதும் சரி, முகத்தை ஒரே மாதிரி ஆடாமல் அசையாமல் ஏதோ போட்டோவுக்கு(photo) போஸ் கொடுப்பது போல் வைத்திருக்கிறாரே.
சி.கு. : பிரபோ,இவரையா யாரென்று கேட்கிறீர்கள்? ஹிஹிஹி..இவர் தான் இந்தியா நாட்டின் பிரதமர்.
யமன் : அவரைப் பார்த்தால் இப்படி சிரிப்பாய் சிரிக்கிறாயே ?
சி.கு. : இப்போதெல்லாம் இந்திய நாட்டு மக்கள் அனைவரும் அப்படித்தான் எள்ளி நகையாடுகிறார்கள். இவருடைய specialty என்ன தெரியுமா பிரபு, யார் முறைகேடு செய்தாலும் அவரை மிக நல்லவர் என்று சொல்லி விடுவார். அது மட்டுமில்லை எந்த முறைகேடு பற்றியும் தனக்கு தெரியாதென்று சொல்லி விடுவார்.
யமன் : Wow what a man!!.. பேசாமல் பிரம்மாவுக்கு பதில் நாம் இவருக்கு ரிப்போர்ட் செய்யலாம்.. இப்படி பூலோகம் வரை வரும் அவசியம் ஏற்பட்டிருக்காது.
சி,கு. : பிரபு என்ன இது ஒரே கலவரமாக இருக்கிறது? இவர்களுக்கெல்லாம் என்ன பிரச்சனை?
யமன் : ஓ அதுவா..சி.கு., இது தான் ஆந்திரா.. இவர்களுக்கெல்லாம் தனி தெலுங்கானா வேண்டுமென்று போராடிக்கொண்டிருக்கிறார்கள்.. சந்திரசேகர் ராவ் என்று ஒருவர் இருக்கிறார்,அவருக்கு பொழுது போகவில்லை என்றால் இப்படித் தான் கூட்டம் கூட்டி ஊர்வலம்,கலவரம் எல்லாம் செய்வார்..
சி,கு. : பிரபு இது என்ன கூட்டம்?
யமன் : சப்பா!!!! ஆனா ஊன்னா கும்பல் கும்பலா கிளம்பிட்ரானுங்க.. குளிக்கரானுங்களோ இல்லையோ பளிச்சுன்னு வெள்ளை வேட்டி வெள்ளை சொக்கா போட்டுக்கிட்டு வந்துடறானுங்க.. இவனுங்க தான் சித்திரகுப்தா கேரளாகாரனுங்க..
சி.கு. : இவனுங்களுக்கு என்ன வேணுமாம்?
யமன் : நல்லா இருக்கிற அணைய உடைக்கத்தான் இப்படி freshஆ போயட்டிருக்கானுங்க.. இவனுங்களுக்கு அடுத்தவன் நல்லா இருந்தா பொறுக்கவே பொறுக்காது சி,கு.
நீண்ட பயணத்திற்கு பிறகு :
சி.கு. : ஒரு வழியாக தமிழ் நாட்டுக்குள் வந்துவிட்டோம் பிரபு.
யமன் : என்ன இது தான் தமிழ் நாடா? ஆமாம் நீ எப்படி கண்டுபிடித்தாய்..
சி.கு. : ஊரே இருட்டா இருக்கு,எங்கேயும் கரண்டே இல்ல,அப்போவே புரிஞ்சிக்க வேண்டாமா இது தான் தமிழ் நாடுன்னு
காட்சி: மூன்று
யமன் : சி.கு., இங்கு ஏதோ ஒரு மாற்றம் தெரிகிறதே.. நினைவிற்கு வந்து விட்டது.. சென்ற முறை நான் இந்த வழியாக செல்லும்போது ஒரு அழகிய பூங்கா இருந்தது,,இப்போது அது அழுகிய குப்பைமேடாக மாறிவிட்டது.. ஏன் இந்த நாற்றம் சாரி மாற்றம்?
சி.கு : என்ன பிரபு இப்படி ஒன்றும் தெரியாதவராகவே இருக்கிறீர்கள்.அது அவருடைய ஆட்சியில் கட்டப்பட்டது, இவங்க வந்ததும் அதை நாசம் பண்ணிட்டாங்க..
யமன் : அப்போ இவங்க ஆட்சியில கட்டினா ?
சி.கு. : Very simple..அவர் ஆட்சியில நாசம் பண்ணிடுவாங்க.. அட எல்லாம் மக்கள் பணம் தானே பிரபு..
யமன் : தூ!!
யமன் : சி.கு., இனியும் இந்த இடத்தில் நாம் இருவர் மட்டும் சமாளிப்பது கஷ்டம்.ஒரு மானிடனை துணைக்கு சேர்த்துக் கொள்வது தான் சரியென தோன்றுகிறது.அப்போது தான் நமது டேட்டாபேசில் குறிப்பிட்டுள்ளது போல் ஏன் நடப்பதில்லை என்பதை கண்டறிய முடியும்.
சி,கு. : ஆமாம் பிரபோ..அதோ ஒருவன் வருகிறான்,நம் காரியத்திற்கு இவன் சரியாக இருப்பான் என்று தோன்றுகிறது.
யமன்,சி.கு தங்களை அறிமுகபடுத்தி கொண்டார்கள்.அந்த வாலிபனின் பெயர் ராஜு. அந்த வாலிபன் நமது வாசகர்களைப் போல ஒரு அதிசய சக்தி படைத்தவன்,அதனால் அதிகமாக எந்த கேள்வியும் கேட்காமல், யமனையும் சித்திரகுப்தனையும் உடனே அடையாளம் கண்டுகொண்டான்.
ராஜு : Mr.யமன் வாங்க,எங்க வீட்டுக்கு போயி மொதல்ல சாப்பிடுவோம்.
சி.கு. : பிரபோ சாப்பாடாம்,வாருங்கள் உடனே புறப்படலாம்.
யமன் : அல்பமே அலையாதே..மானிடா,உன் வீட்டிற்கு செல்ல,இன்னும் எத்தனை தூரம் நடக்க வேண்டும்.
ராஜு : நடந்து போனா நாளைக்கித் தான் போவோம்,வாங்க busல போலாம்.
பேருந்து பயணம் முடிந்து,இறங்கும்போது,
யமன் : மானிடா,என்ன 3 டிக்கெட் 39 ரூபாயா? இந்த சாதாரண தூரத்திற்கா இவ்வளவு விலை?
ராஜு : Mr.யமன் எப்போ 'அவங்க' ஆட்சிக்கு வந்தாலும் விலை மட்டும் ஏறிடும்.
சி.கு. : விலை ஏறுகிறது சரி,தரம் கூடுகிறதா?
ராஜு : இல்லை
யமன் : வடிவேலு சொல்வதை போல்,இந்த ஊர்ல தான் இதுக்கு பேரு பஸ்ஸு(bus), துபாய்ல இதுக்கு பேரு குப்பை லாரி.
பிறகு சாப்பிடுகிறார்கள்.
சி.கு. : என்ன மரியாதி என்ன மரியாதி..சாப்பாடு பிரமாதம்..இன்னொரு ரவுண்டு கூட full கட்டு கட்டலாம் போல இருக்கு.
யமன் : OC சோத்த தின்கறதுக்குன்னா எத்தன ரவுண்டு வேணும்னா போவியே.. ஆமாம் மானிடா,இதற்கெல்லாம் எவ்வளவு பில் தர வேண்டும்?
ராஜு : அதெல்லாம் வேண்டாமுங்க
யமன் : இல்லையே,ஒரு முறை நானும் சி.கு.வும் சாப்பிட்டு முடித்த பிறகு பணம் கேட்டு எங்களை துரத்து துரத்து என்று துரத்தினார்களே..
இப்படித்தான் எங்களை துரத்தினார்கள்..
ராஜு : அது ஹோட்டலில் தான் வீட்டில் இல்லை..அது மட்டும் இல்லை,எனக்கு 20 கிலோ அரிசி அரசாங்கம் இலவசமாவே குடுத்துடுது.
யமன் : என்ன இலவசமாகவா? ஆமாம் உன் மாத வருமானம் எவ்வளவு?
ராஜு : அதெல்லாம் எதுக்குங்க..சரி குத்து மதிப்பா ஒரு 50k, அதாவது ஒரு ஐம்பதாயிரம்னு வச்சிக்கோங்களேன்.
யமன் : இவ்வளவு சம்பளம் வாங்கற உனக்கும் இலவசமா அரிசி குடுக்கறாங்கள?
ராஜு : அரிசி மட்டும் இல்ல,இன்னும் மிக்சி, கிரைண்டர்,fan எல்லாம் வர போகுது..அதோ பார்க்கிறீங்களே TV அது மட்டும் என்ன,என் காசுல வாங்கினதுனா நினைச்சீங்க? எல்லாம் governmentல குடுத்தது தான்.
யமன் : மிக்சி,கிரைண்டர்,fan,TV எல்லாம் இலவசமென்றால்,நீ உழைத்து வாங்கியது என்ன?
ராஜு : அதை இப்போவே சொல்லிட்டா waste யமன்,lastல சொல்றன்..
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது இரண்டு பெண்மணிகள் உள்ளே நுழைந்தார்கள்.தங்களின் அறைக்குச் சென்றார்கள்.அவர்களை கடும் கோபத்துடன் ராஜு பார்த்து கொண்டிருந்தான்.
யமன் : மானிடா,யார் அந்த பெண்மணிகள்? அவர்களை எரித்து விடுவது போல் ஏன் பார்க்கிறாய்?
ராஜு : இவங்களா,இவங்க தான்,என்னோட 'அம்மா' & 'சின்னம்மா'..
சி.கு : சரி,அதற்கு ஏன் இவ்வளவு கோபம்.?
ராஜு : நான் சின்ன வயசா இருக்கிறப்போல இருந்து பார்க்கிறேன்,ஊர்ல இருக்கிறவங்க எல்லாம்,என்னோட சின்னம்மா தான் அம்மாவ கெடுக்கறதா சொல்லுவாங்க.கணக்கு வழக்கு விஷயத்திலே ரெண்டு பெரும் நிறைய fraud பண்ணி இருக்காங்கனு சொல்றவங்க எல்லாரும்,சின்னம்மா தான் எல்லாத்துக்கும் காரணம்னு சொல்லுவாங்க..
யமன் : அப்போது உன் சின்னம்மாவை அனுப்பி விடுவது தானே?
ராஜு : அந்த கொடுமைய எதுக்கு தல கேக்கறிங்க? ஒரு வாட்டி அம்மாவுக்கு ஆத்திரம் வந்து சின்னம்மாவையும், மொத்த குடும்பத்தையும் துரத்திட்டாங்க..எங்க கிட்ட வேலை பார்க்கிற எல்லாருக்கும் அவ்வளவு சந்தோஷம்.. இந்த சந்தோசத்த கொண்டாட, எங்க டிரைவரும், சமையல்காரனும் மொட்டை வேற போட்டுகிட்டாங்க..
சி.கு. : பிறகு என்ன ஆயிற்று?
ராஜு : மொட்டை போட்டவங்க மண்டைல முடி வளர்ரதுக்குள்ள சின்னம்மாவ திரும்ப வீட்ல சேத்துகிட்டாங்க..
சி.கு. : வேதனை வேதனை..ஆனாலும் உன் கோபத்துக்கு வேறு ஏதோ உள்ளர்த்தம் இருப்பதாகவே தோன்றுகிறதே மானிடா..
ராஜு : அட சின்னம்மாவ மட்டும் சேர்த்துக்கிறதா சொல்லிட்டாங்க சி.கு.,இதுக்கு மொத்த குடும்பத்தையுமே சேர்த்திருக்கலாம்..எங்க மாமாவும் வீட்டுக்கு வந்திருப்பாரு,நானும் அவர் பொண்ணு ரஞ்சிதாவ உசார் பண்ணியிருப்பேன்..
யமன் : ரஞ்சிதாவா? தூ..உனக்கு மட்டமான ரசனையடா மானிடா..
மறுநாள் இவர்களின் வீதி உலா தொடர்கிறது.
யமன் : மானிடா யார் இவர்கள்.. ஏன் இவ்வளவு பெரிய ஊர்வலம்? இதை தலைமையேற்று நடத்துகிறார்களே அவர்கள் யார் ?
ராஜு : தலைமை ஏத்து நடத்திட்டிருக்காரே,அவர் தான் கிருஷ்ணதாஸ்.. போன தேர்தல்ல ஜாதி பேர் சொல்லி ஜெய்ச்சிடலாம்னு நினைச்சாரு..எவ்வளவு நாள் தான் இத எல்லாம் சொல்லி ஏமாத்த முடியும்? அவர் கட்சிக்கு பலத்த அடி..அதான் அடிக்கடி இந்த மாதிரி publicity stunt எல்லாம் தலைவர் காட்டுவார்.. இப்போ பால் விலை உயர்வை கண்டித்து போராடுறாங்க..
யமன் : இவ்வளவு மக்கள் எப்படி அவருடன் சேர்ந்தார்கள்?
ராஜு : அட இவங்க எல்லாம் பாதிக்கப்பட்டவங்க பாஸ்..
யமன் : அதாவது இவர்கள் எல்லாம் பணக்காரர்கள் இல்லை என்கிறாய்? அனைவரும் பாதிக்கப்பட்டவர்கள் தானா?
ராஜு : அப்படின்னு சொல்லிட முடியாது..அதுல ஒரு group சரக்குக்கும் பிரியாணிக்கும் ஆசைப்பட்டு சேர்ந்த கோஷ்டி.
சி.கு. : பிரபோ,எனக்கு பசி அதிகமாக இருக்கிறது,ஒரு டீ,மசால் வடை சாப்பிடலாம்
யமன் : சி.கு.,வேளா வேளைக்கும் இந்த வேலையை மட்டும் நன்றாக செய்..சரி எனக்கும் பசிக்கிறது வா..
மேஜை மேல் இருந்த பத்திரிக்கையை படிக்கிறார் யமன்.
யமன் : மானிடா,யார் இவர்?இவர் பிறந்த நாளுக்கு இவ்வளவு ருபாய் நோட்டுக்களை சேர்த்து மாலை அணிவித்திருக்கிறார்களே?
ராஜு : அவர் ஒரு மூத்த அரசியல்வாதி..அட இது இந்த நாட்டுக்கு ஒன்னும் புதுசு இல்லைங்க.. உத்தரப்பிரதேசத்திலே ஒரு பெண் அரசியல்வாதி பண்ணாங்க..இப்போ தலைவருக்கு அதே மாறி பண்ணி அழகு பார்த்திருக்காங்க..
யமன் : மானிடா,முன்பு சொன்னாயே ஏழைகள்..
ராஜு : ஆமா ஆமாம்..
யமன் : அவர்களுக்கு சேர வேண்டிய பணம் எல்லாம் இங்கே தான் இருக்கிறது என்று நினைக்கிறேன் ..
திடீரென அங்கிருந்த தொலைக்காட்சியில் தனக்கு பிடித்த நடிகர் தோன்ற, உற்சாகமடைந்த ராஜு,கை தட்டி ஆரவாரம் செய்தான்.. "தலைவா!!!!" - என கூச்சலிட்டான்..
யமன் : மானிடா,யார் இவர்,இவர் திரையில் தோன்றியதற்கு ஏன் இவ்வளவு கூச்சல் போடுகிறாய்..
ராஜு : இவர் தான் எனக்கு மிக பிடித்த நடிகர்,ஷவர் ஸ்டார் குமாரவாசன்.. பக்கத்து ஸ்டேட்ல இருக்கிறவன தண்ணி திறந்து விட சொல்லி strike பண்ணிட்டிருக்கார்..
யமன் : ஆமாம்,இதை ஏன் இவர் செய்கிறார்?அதற்குத் தானே இங்கே அரசாங்கங்கள் இருக்கின்றன?
ராஜு : அது இருக்கும்..ஆனாலும் தலைவர் குரல் கொடுப்பார்..அந்த ஸ்டேட்ல இருக்கிற நடிகனுங்க மட்டும் தமிழ் நாட்டுக்கு தண்ணி திறந்து விட கூடாதுன்னு ஊர்வலம் போனாங்களே..அந்த மாதிரித்தான் இதுவும்..
யமன் : இதெல்லாம் ஒரு பொழப்பு.
ராஜு : பார்த்திங்கல்ல அவர் பின்னாடி எவ்வளவு பெரிய கூட்டம்னு..
யமன் : இங்கே எல்லாவற்றிற்கும் ஒரு கூட்டம் கூடிவிடுகிறது..இந்த நடிகன் இப்படி புலம்புவதை விடுத்து தன வேலையை பார்த்தாலாவாது ஏதேனும் உபயோகம் இருக்கும்..
ராஜு : யோவ்,என்னய்யா நீ..சுத்த மொக்க பீசா இருக்க..நமக்கு தேவை entertainment,அது இப்படி கிடைக்குதேன்னு சந்தோசப்படுவியா..அதா விட்டுட்டு..
யமன் : சித்திரகுப்தா,இவன் ரொம்ப பேசறான்..இவன் விதியை இப்போதே முடித்து விட ஏதேனும் வழி இருக்கிறதா பார்
ராஜு : சகோதரர்,WHY THIS KOLAVERI?
யமன் : தோம் தாத்தா..
சி.கு, : மானிடா,என்ன இத்தனை வாகனங்கள்(ஆட்டோ) இருந்தும் அனைவரும் நடந்தே செல்கிறார்களே? ஏன்?
ராஜு : அதுவா, பெட்ரோல் விலை ஏத்திட்டாங்கல்ல,அதனால ஆட்டோகாரங்க ரேட் ஏத்திட்டாங்க..அதான் மக்கள் நடந்தே போய்க்கலாம்னு முடிவு பண்ணிட்டாங்க..
சி.கு. : ஓஹோ,அப்போது விலையை உயர்த்திவிட்டால்,அந்த பொருளை உபயோகிப்பவர் எண்ணிக்கை குறைந்துவிடுகிறது..அப்படித்தானே..
ராஜு : அங்க தான் சகோதரர் நீங்க தப்பு பண்றீங்க..எதிர்க்க இருக்கு பார்த்திங்களா டாஸ்மாக்,அந்த புரோடக்ட்டுக்குக்(product) கூடத்தான் விலை ஏத்திட்டாங்க..ஆனாலும் பிசினஸ்(business) எப்படி அமோகமா நடக்குதுன்னு பார்த்திங்கல்ல..
"கள்ளுக்கடை காசிலே தாண்டா கட்சிக்கொடி ஏறுது போடா" - என்ற பாடல் ஒலித்தது.. மூவரும் அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்கள்..
காட்சி - நான்கு.
யமன் : சி.கு.,நமது விசேஷ வரைபடத்தின் படி இந்த இடத்தில் ஏதோ கோளாறு இருப்பதாக தெரிகிறது..
சி.கு. : மிகவும் சரி பிரபு..நமது database பழுதடைந்ததற்கு இந்த இடம் ஒரு முக்கிய காரணம்.
யமன் : ஆம்,நமது சோதனையை இங்கிருந்தே தொடங்கலாம்..
சி.கு. : பிரபோ, நமது database சொல்லும் தகவலின் படி,அதோ அங்கே இருக்கிறதே அந்த பறவையின் உயிர் அதன் உடலிலிருந்து, இன்னும் சில நொடிகளில் பிரிய வேண்டும்.
யமன் : எப்படி?
சி.கு : "இதோ இப்படித்தான் " - என்று அந்த பறவை இருந்த திசையை நோக்கி கை காட்டியவுடன்,யமன் ஆச்சர்யத்திலும்,அதிர்ச்சியிலும் நின்று விட்டார்.
சி.கு: பிரபோ,அந்த பறவை,அந்த மின்சார கம்பியின் மீது அமர வேண்டும்,அதில் பாயும் மின்சாரம் தாக்கி இறக்க வேண்டும்..இது தான் பிரம்மா நமக்கு கொடுத்த 'requirement'..
யமன் : நமது coding கூட சரியாகத்தானே இருக்கிறது,குறிப்பிட்ட நேரத்தில்,குறிப்பிட்ட இடத்தில் அந்த பறவை வந்து அமர்ந்ததே..மின்சாரம் தாக்கி அது உடனே இறந்திருக்க வேண்டுமல்லவா?
ராஜு : சகோதரர்,first ஒன்னு தெரிஞ்சிக்கோங்க, இங்க தினமும் சாயங்காலம் 4 - 6 பவர் கட்..அதனால மின்சாரம் வராது.. கரண்ட் வராம பறவைக்கு ஷாக்கும் அடிக்காது,அது சாகவும் சாகாது..
யமன் : இது என்ன புதுக்கதை?
ராஜு : கதையா? நீங்க தான் காலத்துக்கேத்த மாதிரி உங்க database update பண்ணாம விட்டுட்டீங்க.. இதை நீங்க server side validationல பண்ணாம விட்டுடிங்க.. கரண்ட் இல்லைன்னா தான் இந்த விதி இதுக்கு பொருந்தும்னு நீங்க program பண்ணியிருக்கணம்.. அதான் உங்க பிரச்சினை.. இன்னும் எங்க software languageல சொன்னா,இந்த null check பண்ணாம விட்டுட்டீங்க..
if(null != power) {
//your code
}
யமன் : சி.கு.,முதலில் இவனுக்குத்தான் என் பாசக்கயிற்றை வீச வேண்டுமென நினைக்கிறேன்?
சி.கு. : ஏன் பிரபு?
யமன் : இல்லைன்னா,இவன் பேசி பேசி நம்மையே கொன்னாலும் கொன்னு போட்டுடுவான்.. கொடூரமான மொக்கையா இருக்கான்..
சி.கு : விடுங்கள் பிரபு,நமக்கு இவன் நிறைய உதவி செய்திருக்கிறான்..onion ஊத்தப்பம்,சில்லி பரோட்டா எல்லாம் வாங்கி கொடுத்திருக்கிறான்..
யமன் : இதை எல்லாம் வேறு அமுக்கியிருக்கிறாயா அவனிடமிருந்து.. சி.கு.,எனக்கொரு சந்தேகம்? இங்கு தான் மின்சாரமே இருப்பதில்லையே,பிறகு எப்படி நீ Cause of death : Electricity என்கிற வகையில்(Category) பல உயிர்களை குறிப்பிட்டிருந்தாய்?
சி.கு : அதுவா பிரபு,விளக்கு இல்லாத காரணத்தால் வழி புரியாமல் சில மானிடர்கள் குளத்திலும்,கிணற்றிலும் குதித்து நம்மிடம் வந்தார்கள்.. அதை எல்லாம் இந்த லிஸ்ட்டில் சேர்த்துவிட்டேன்.. eppoooodi..
யமன் : இதிலே பெருமை வேற..சி.கு., அந்த மானிடனை கூப்பிடு,அவனிடம் ஒரு முக்கியமான விஷயம் கேட்க வேண்டும்..
ராஜு : சொல்லுங்க Mr.யமன்
யமன் : ஆமாம் மானிடா, உனக்கு மிக்சி,கிரைண்டர்,fan,லேப்டாப்,TV,அரிசி என அனைத்தும் அரசாங்கம் இலவசமாக அளித்து விடுகிறதல்லவா..
ராஜு : Absolutely..
யமன் : பிறகு நீ உன் உழைப்பில் எதையோ வாங்கியதாகச் சொன்னாயே என்ன அது?
ராஜு : அதுவா,சொல்றேன்..அதுக்கு முன்னாடி ஒரு fact சொல்றன் கேட்டுக்கோங்க சொல்லப்போனா ராத்திரி பதினொரு மணியில இருந்து 3 மணிவரை மின்தடை, இன்னும் சில ஊர்களிலே night பத்து மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மின் தடை..தப்பித்தவறி கரண்ட் இருந்தாலும் கூட low voltage தான்..
சி.கு. : factu factu factu factu factu factu factu!!!!
ராஜு : உங்க பாஷையில சொன்னா,நரக வேதனை தான்..
யமன் : அதற்கு?
ராஜு : இவ்வளவு இலவசம் கொடுத்தாலும் இதெல்லாம் கரண்ட் இருந்தாத்தானே ஓடும்?அதுக்குத்தான் அண்ணன் கைக்காசை போட்டு ஒரு inverter வாங்கிட்டன்..
யமன் : அட கொடுமையே..சித்திரகுப்தா,உனக்கு நினைவிருக்கிறதா?ஒரு நான்கு மாதங்களுக்கு முன்னாள் நீ ஒரு மானிடனின் profileலை தவறுதலாக ரீசைக்கிள் பின்னிற்கு(Recycle Bin) அனுப்பிவிட்டாயே..
சி.கு. : மறக்க முடியுமா பிரபோ..தாங்கள் கூட அவனை மீண்டும் தமிழகத்திற்கே போ என்றீர்களே..
யமன் : அவனை எவ்வளவோ எச்சரித்தேன்,
"இங்கே இருந்தால் உன்னை எண்ணெய் கொப்பரையில் போட்டு வறுத்து எடுத்து விடுவார்கள்.. மரியாதையாக திரும்பிப்போ என்றேன்".. ஆனால் அவனோ,"எண்ணெயில் வெந்து போக கூட தயார்,அனால் மீண்டும் தமிழகத்திற்கு மட்டும் செல்ல மாட்டேன்" - என்று அடம் பிடித்தான்..
அதற்கு காரணம் இப்போதல்லவா புரிகிறது..
சி.கு. : ஆக, நமது நரகம் இங்கு இருக்கும் நகரத்தை விட எவ்வளவோ பரவாயில்லை என்பது போன்ற நிலை வந்துவிட்டது..
யமன் : ஆமாம் சி.கு...நாம் வந்த வேலை முடிந்து விட்டது..நமது databaseல் இருக்கும் bug(கோளாறு) fix பண்ண பிரம்மாவிடம் அனுமதி பெற வேண்டும்..
சி.கு. : பிரபு பிரபு,வந்தது வந்து விட்டோம்,அப்படியே சுந்தர் C நடித்த முரட்டுக்காளை படம் பார்த்து விட்டு செல்லலாம் பிரபு..
யமன் : சித்திரகுப்தா, நான் தான் யமன்,நீ இந்த மாதிரி படமெல்லாம் காண்பித்து எனக்கே யமனாக பார்க்கிறாயா.. bloody rascal.. நாம் இங்கு L1 விசாவில் தான் வந்திருக்கிறோம்..அது இன்றோடு expire ஆகிறது.. உன்னைப் பற்றி தெரிந்து தான் பிரம்மா H1B request reject செய்து விட்டார்...
சி.கு.: I am very sorry பிரபு..உடனே கிளம்பலாம்
யமன் : தோம் தாத்தா!!!
6 comments:
Super and innovative too could have even written more.
Expecting next part of this :)
superb da :)
@Vengat,Anitha and Krish - Thanks for your comments..regd 2nd part, let me see :-)
padam super thala.... inthavarusam oru remake podurathu
Kamal bhai - thanks for the motivation :D next update on the way :P
Post a Comment