Tuesday, August 23, 2011

அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவாக கோலிவுட் - ஒரு கற்பனை





நண்பர்களே!! சமீப காலமாக ஒரு விஷயம், இல்லை இல்லை ஒரு மனிதர் நாட்டில் ஒரு வித பரபரப்பை உருவாக்கி வருகிறார்.தலைப்பைப் பார்த்ததுமே ஊகித்திருப்பீர்கள் யார் அந்த மனிதர் என்று.ஆம் அவர் தான் பாரதம் புகழும் அண்ணா ஹசாரே அவர்கள்.ஏறத்தாழ அனைத்து பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் இவரைப்பற்றியச் செய்திகளைத் தான் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.நம் பங்குக்கு நாமும் ஒரு பதிவை அவருக்கென அர்ப்பணிக்க வேண்டுமென்று தோன்றியது.அதன் விளைவே இந்தப் பதிவு. நண்பர்களே,இது முழுக்க முழுக்க என் கற்பனையே.இது யாருடைய நன்மதிப்பையும் சீர்குலைக்கும் நோக்கத்தோடு எழுதப்பட்டப் பதிவல்ல என்பதை தெளிவுப் படுத்திக் கொள்கிறேன்.

அண்ணா ஹசாரே அவர்களின் ஊழலுக்கெதிரான இந்தப் போராட்டம் பற்றியும் அவரது உண்ணாவிரதத்தைப் பற்றியும் சில பிரபலங்கள் அவர்களுடைய கருத்துக்களை பேட்டியில் குறிப்பிட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்தேன். ஒரு வேளை இப்படி இருக்குமோ என்னவோ ?

முதலாவதாக இளையதளபதி விஜய் அவர்கள் கூறிய கருத்து :

கேள்வி : அண்ணா போராட்டத்தைப் பற்றி உங்கள் கருத்து?

விஜய் : நான் எப்பவும் அண்ணா கட்சி தான்.நீங்க என் படத்துலையே கூட பாக்கலாம்.அடிக்கடி "என்னங்க'ணா', சொல்லுங்க'ணா'"னு நிறைய வசனம் வரும்.அவ்வளவு ஏன்?இத்தன வருஷம் அண்ணா ஆரம்பிச்ச தி.மு.க கூட நெருக்கமா இருந்தேன்.இப்போ ஒரு படி மேல போயி 'அண்ணா'தி.மு.க கூட சேர்ந்துட்டன் ல.அண்ணாவோட போராட்டத்துக்கு நானும் என் ரசிகர்களும்,ராமருக்கு அணில் மாதிரி இருந்து உதவி செய்வோம்.

நான் ஒரு வாட்டி முடிவு பண்ணி இறங்கிட்டேன்னா ஏன் பேச்ச நானே கேக்க மாட்டேன்.

இதைக் கேட்டதும் கௌண்டமணி இப்படி ஒரு "கமெண்ட்" அடிக்கிறார்.

கௌண்டமணி : அடேய் உனக்கு யாரு டா இப்படி எல்லாம் பேச சொல்லி சொல்லிகுடுக்க்றது?

அடுத்ததாக தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்.

விஜயகாந்த் : நாட்ல ஊழல் பெருகிபோச்சு.மக்களே இதுக்கெல்லாம் நம்ம அசர கூடாது.இத ஒழிச்சி கட்ட ஒரு வாரத்துக்கும் மேல உண்ணாவிரதம் இருக்கிறாரே அந்த மகான் 'பாபா' ராம்தேவ்,அவருக்கு நம்ம ஆதரவ தெரிவிக்கனம்.

அவர் கட்சித் தொண்டர் : தலைவா அது 'பாபா'ராம்தேவ் இல்ல,அண்ணா ஹசாரே.

(பட் பட் பட் என சத்தம்,விஜயகாந்த் தொண்டரைப் போட்டு சாத்தி எடுக்கிறார்)

அடுத்தது நடிகர் சூர்யா.

சூர்யா நேரா அண்ணா ஹசாரே போஸ்டர் முன்னாடி நல்லா விழுந்து கும்பிடுறாரு.

கௌண்டமணி : அய்யோ ராமா என்னை ஏன் இந்த மாதிரி கழிசாட பசங்க கூட எல்லாம் சேர வெக்கற ?

சூர்யா : நான் ஏன் இப்படி வெளிப்படையா கால்ல விழரேன்னு பார்க்கறீங்களா?நல்ல விஷயம் தானே இது? என்னைப் பாத்து இன்னும் நாலு பேர் இப்படி கால்ல விழுந்தா நாட்டுக்கு நல்லது தானே ? நான் ஒரு அண்ணா ஹசாரே பேன்னு பெருமையா சொல்லிக்குறேன்.

கௌண்டமணி : நம்ம ஊருக்கு நாய் புடிக்கற வேன் வரட்டும் கண்டிப்பா உன்ன நான் புடிச்சு குடுத்துடுறேன்

அடுத்ததா நம்ம தல அல்டிமேட் ஸ்டார் அஜீத்.

அஜித் : நல்ல போராட்டத்துக்கு விளம்பரம் தேவை இல்லை.

கௌண்டமணி : ஐயோ இவரு பெரிய ஷேக்ஸ்பியர் "philosophy" எல்லாம் பேசறாரு.

அஜித் : இந்தப் போராட்டத்துக்கு வர்லன்றுதுக்காக நாங்க ஊழல எதிர்க்கலைன்னு அர்த்தம் இல்ல.சினிமாவ சினிமாவா இருக்க விடுங்க.

கௌண்டமணி : இப்போ நீ சொன்ன வாக்கியத்த தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுல வெட்டி வச்சிட்டு பக்கத்துலேயே நீ உக்காந்துக்கோ.உனக்கு பின்னால வர்ற சந்ததிகள் அதா பாத்து படிச்சி தெளிவா நடந்துக்குவாங்க.

விக்ரம் : என் பேரு கிருஷ்ணா அவலாஞ்சி நிலா நிலா 

கௌண்டமணி : எப்பா சாமி போதுமடா ஒட்டினது ரீல் அந்து போச்சு.

சிம்பு : உண்ணாவிரதம் இருக்கிறேன்னு அரசங்காத்த மிரட்டி வர்றதில்ல புரட்சி,உன் கொள்கைள மிரண்டு வர்ணம்.இந்த மாதிரி எல்லாம் எனக்கு நடிக்கத் தெரியாதுங்க.

கௌண்டமணி : ஏன் உனக்கிந்த வேல?நீ வாங்குற பத்து அஞ்சி பிச்சைக்கு இது தேவை தானா? 

தனுஷ் : அண்ணா ஹசாரே போராட்டம் என் படத்துல வர்ற வசனத்த அப்டியே உண்மையாக்கி இருக்கு."நாங்கெல்லாம் சுனாமிலேயே சும்மிங்கப் போடுவோம்"னு காங்கிரஸ் அரசாங்கத்துக்கு எதிராவே போராட்ராறு.

கௌண்டமணி : மூடரா வாய வெளக்கென்ன கருப்பா

ரஜினி : நம்ம நாட்டிலே வறுமை இன்னும் ஒழியலே Rich gets richer, poor get poorer

கமல் : லஞ்சம் குடுக்கறதும் தப்பு லஞ்சம் வாங்கறதும் தப்புன்னு ஒவ்வொரு இந்தியனும் உணரணம். அது வரைக்கும் என்ன மாதிரி, இந்த மாதிரி தாத்தாக்கள் வந்துகிட்டே தான் இருப்பாங்க

6 comments:

Dare to Dream said...

Nice da!!!

Karthi said...

Nice imagination Harish....
But ensure that it wont hurt any "Fans".....

Harish.M said...

Venkat - thanks for commenting :-)

Harish.M said...

Karthi - Cool.. ya my intention is just to make fun of everyone,not to ridicule any artiste :-)

Thats a nice comment from you :-)

Thanks

Vengat said...

Where are the Goundamani comments for Rajni and Kamal dude?

Harish.M said...

Vengat - for them the comments are not needed..That's the way it should end