இங்கு நான் ஒரு நாடகத்தை எழுதவிருக்கிறேன். இது முழுக்க முழுக்க என்னுடைய கற்பனையே.இந்த நாடகத்தில் வரும் அணைத்து வசனங்களும்,சம்பவங்களும் மற்றும் கதாபாத்திரங்களும் கற்பனையே. இது உண்மை கதை அல்ல.இது என் கற்பனை நாட்டில் பொற்கால ஆட்சி[:P] புரியும் ஒரு மன்னனை பற்றிய நாடகம்.
கதை சுருக்கம்: புதிதாக மந்திரி பதவி ஏற்றிருக்கும் சரவணன் மன்னனின் ஆட்சி மற்றும் மக்களின் வாழ்கை தரம் குறித்து மன்னனுடன் உரையாடுகிறான்.இப்படி சாதரணமாக ஆரம்பிக்கும் இந்த உரையாடல் எதில் முடிகிறது என்பது தான் இந்த நாடகத்தின் சாராம்சம்.
காட்சி-1
[பங்குபெரும் கதைமாந்தர்கள்- மன்னன் தயாளன்,மந்திரி சரவணன், ஜால்றா மந்திரி அறிவழகன்.]
காவலாளி : ராஜாதி ராஜ,ராஜ மார்த்தாண்ட,ராஜ கம்பீர,ராஜ குலத்திலக தயாள ராஜா வருகிறார் வருகிறார் வருகிறார்
[மந்திரி சபையில் அனைவரும் எழுந்து நிற்கிறார்கள். மன்னன் அமர்கிறார்.சற்று நேரம் அனைவரும் நிற்பதை ரசித்து விட்டு அனைவரையும் அமரும்படி தலையசைக்கிறார்.]
மன்னன் : இந்த காவலாளியை கைது செய்து இருள் நிறைந்த சிறையில் அடையுங்கள்.
(ஏன் என அனைவரும் குழம்ப,மன்னர் தொடர்கிறார்) இவன் என்னை தயாளன் என்று கூறிவிட்டான். அதற்காக தான் இந்த தண்டனை.
சரவணன்(அறிவழகனிடம் கேட்கிறான்) : தயாளன் தானே மன்னரின் பெயர்,அதை சொன்னதற்கா இந்த தண்டனை?
அறிவழகன் : ஒய் மங்குனி மந்திரியாரே!! மன்னரை தர்மசீலர்,தலைவர் இப்படி தான் அழைக்க வேண்டும். அவர் பெயர் சொல்லி அழைத்தால் அதை அவர் ஒரு இழுக்க்காகவே கருதுகிறார்.
(சரவணனுக்கு இது வியப்பாகவே இருந்தது சற்று கேவலமெனவும் கருதினான்,இருந்தும் அமைதி காத்தான்)
மன்னன் (அறிவழகனை நோக்கி) : எனது இன்றைய நிகழ்சிகளை பட்டியலிடு
அறிவழகன்(முகத்தில் ஒரு அசட்டு சிரிப்புடன் ) : மன்னா சென்ற வாரம் கலை கூத்தாடிகளுக்கு அவர்களுடைய வீடுகளை மீண்டும் அவர்களுக்கே கொடுத்து விட்டீர்கள் அல்லவா, அந்த தியாகச்செயலை பாராட்டி இன்று மாலை தங்களுக்கு அவர்கள் ஒரு விழா எடுக்கிறார்கள்.
மன்னன் : பலே பலே!! ஆனால் நான் அவர்கள் வீடுகளை சென்ற வாரமே திருப்பி கொடுத்ததும் இப்போது தான் விழா எடுக்கிறார்களா?என்ன கேவலம்? காக்கை கூட்டம் எப்போதும் இப்படி தான் காலம் கடந்து கிடைத்த உதவிகளுக்கெல்லாம் உடனே விழா எடுப்பார்கள். ஆனால் எனக்கு மட்டும் ஒரு வாரம். இருந்தாலும் நமக்கு விழா தான் முக்கியம் ஆகையால் இதற்கு சம்மதிக்கிறேன்.சரி வேறு ஏதேனும் சேதி உண்டா?
அறிவழகன் : இல்லை மன்னா !!!
மன்னன் : சரி அவை கலையலாம்!! சரவணா நீ மட்டும் என்னுடன் வா.
(சரவணன் ஒன்றும் விளங்காமல் குழப்பத்துடன் மன்னனை பின் தொடர்ந்து செல்கிறான்)
மன்னன் : நீ மந்திரி சபைக்கு புதிதாய் வந்திருப்பவன்!! இங்கு நடப்பவை குறித்து உனக்கு பல குழப்பங்கள் இருப்பதை என்னால் உணர முடிகிறது. உன் கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து கொள்.
சரவணன் : மன்னா நாட்டுக்கெல்லாம் பகுத்தறிவை போதிக்கும் தாங்கள்,தங்களுடைய விரல்களில் இத்தனை விதமான கல் பதித்த மோதிரம் அணிந்திருப்பதன் காரணம்?
மன்னன் : சரவணா,என் ஜாதகப்படி இப்படி கல் பதித்த மோதிரம் அணிந்தால் ஆட்சி என்றும் என்னிடமே இருக்கும் என்று என் குடும்ப ஜோசியன் கூறினான். அதற்காக தான் அணிகிறேன். இந்த பகுத்தறிவு,உபதேசம்,போதனை இவை எல்லாம் மற்றவருக்கு தானே தவிர எனக்கில்லை.
சரவணன் : சென்ற மாதம் தங்கள் அண்ணாவின்(I mean brother) பிறந்தநாள் என்று,கொலை, கொள்ளை,கற்பழிப்பு,குண்டுவெடிப்பு போன்ற கொடிய குற்றங்கள் செய்த பலரை விடுதலை செய்துள்ளீர்களே? இது தவறல்லவா?
மன்னன் : நீ இதில் ஒன்றை கவனிக்க வேண்டும். நான் விடுவித்ததில் பலர்,தங்கள் சமூகத்தினரிடையே சற்று செல்வாக்கு வாய்ந்தவர்கள்.அவர்களை விடுதலை செய்தால் அந்த செல்வாக்கு நமக்கு வாக்குகளாக மாறும். அப்போது நீ சொல்லும் தவறு செல்லா வாக்காக போகும்.
சரவணன் : விடுதலையானவர்கள் மீண்டும் அதே தவறை செய்தால் பாதிக்கப்படுவது நம் மக்கள் தானே?
மன்னன் : பாதிக்கப்படப்போவது என் மக்கள் அல்லவே சரவணா? ஒன்றை நன்றாக புரிந்து கொள், எனக்கு என்றும் மக்கள் நலம் தான் முக்கியம். அதாவது என் மக்களின் நலம்,எனக்கு பிறந்த மக்களின் நலம். என் மக்களின் பதவிக்கு ஒரு ஆபத்தென்றால் நான் வடக்கே சென்று அங்கு பரம்பரை பரம்பரையாய் ஆட்சி புரியும் அந்த பெரிய குடும்பத்தினரிடம் முரயிட்டேனும் அவர்களுக்கு பதவிகளை பெற்று கொடுப்பேன்.
சரவணன்(எத்தனை கொடிய எண்ணம் இந்த மன்னனுக்கு?) : சரி மன்னா மக்கள் பற்றி கூறினீர்களே தங்களுக்கு பிறகு யார் அரசாள்வது? மூத்த மகன் அழகனா,இளையவர் லெனினா,மகள் அருள்மொழியா அல்லது...?
மன்னன்(ஆத்திரத்துடன்) : சரவணா!!! எனக்கென்ன அப்படி வயதாகி விட்டது என் அடுத்த வாரிசை பற்றி சிந்திக்க? நான் 82 vayathu இளைஞன் தானே? இன்றும் என்னுடைய உடலும் உள்ளமும் இளமையாய் இருக்க யோகா பயிற்சி செய்கிறேனே. பிறகேன் அடுத்த தலைமுறை பற்றி சிந்தனை?
சரவணன் : மன்னா தமிழ் என்றாலே தாங்கள் தான் என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி விட்டீர்கள்? பிறகு என் தங்கள் மகனுக்கு லெனின் என்று பெயர் வைத்தீர்கள்?
மன்னன் : அப்படி கேள்.லெனின் ஒரு சிறந்த போராளி.அப்போதே கம்யுனிச சித்தாந்தத்தால் ஈர்க்க பட்டதால் தான் இந்த பெயர் சூட்டினேன்.
(உரையாடலுக்கு இடையே மின்சார துறை மந்திரி ஆறுசாமி உள்ளே நுழைகிறார்)
ஆறுசாமி : மன்னா நமக்கெதிராக அந்த பத்திரிக்கையில் செய்தி வெளியாகி உள்ளது.
மன்னன் : உடனே அந்த அலுவலகத்தை துவம்சம் செய்யச்சொல்.
ஆறுசாமி : மன்னா நமது தளபதி லெனினை தலைமையேற்க சொல்லவா?
மன்னன் : அவன் இந்த வேலைக்கி சரிபட்டு வரமாட்டான்யா.நீ அழகன கூப்பிடு. அவன் தான் இதுக்கெல்லாம் சரி.
[ஆறுசாமி விடை பெற்று கொள்கிறார்.மன்னனும் சரவணனும் உணவு சாப்பிட செல்கிறார்கள்]
காட்சி-2
[சரவணன் நடந்தவற்றையெல்லாம் கண்டு மிகுந்த மன வருத்தம் அடைகிறான்.சற்று கோபமும் கொண்டு சாப்பிட வர மறுக்கிறான்.இவர்கள் உரையாடல் சொற்போராக மாறுகிறது]
சரவணன் : மன்னா இது நன்றாக இல்லை.
மன்னன் : நீ இன்னும் சாப்டிவே ஆரம்பிக்கவில்லை அதற்குள் நன்றாக இல்லை என்றால் எப்படி?
சரவணன் : போதும் தங்களின் நய்யாண்டி. தங்கள் செய்கைகளை விமர்சித்த ஒரு பத்திரிக்கையாளரை சட்டத்துக்கு புறம்பாக தாக்குவதா? சட்டத்தை பாதுகாக்கிற தாங்களே சட்டத்தை மீறுவதா? இதை என்னால் ஜீரணிக்க முடியாது. இதனால் மக்கள் கிளர்ச்சி உண்டானால் என்ன செய்வீர்கள்?
மன்னன் : சரவணா நீ இந்த மக்களை வச்சி காமெடி கீமெடி பண்ணிலியே? இவனை உதைத்தால் இன்னொருவன் விமர்சிப்பான். அப்போது அந்த பத்திரிக்கையாளனின் சமூகத்தின் பெயரை சொல்லி புது பிரச்னையை கிளப்புவேன். வேறொரு சமூகத்தை அவனுக்கெதிராக துண்டி விடுவேன். என்ன மிஞ்சி மிஞ்சி போனால் விசாரணை கமிஷன் வைப்பார்கள். அந்த கமிஷன எப்படி சந்திக்கறதுன்னு எனக்கு தெரியும் யா.
சரவணன் : இது ஜனநாயக படுகொலை. நான் மன்னராட்சியை ஒழித்து ஜனநாயக முறையில் நடைபெறும் ஆட்சியை நமது நாட்டிலேயே கொண்டுவந்து தங்களுடைய அகந்தையை அடக்குகிறேன்.
மன்னன் : ஜனநாயகமா? அப்படி ஒன்று இருக்கிறதா என்ன? பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்து பரம்பரை பரம்பரையாக ஆட்சி புரிபவர்கள் பலர் வடக்கில் இல்லையா என்ன?
சரவணன் : அதைப்பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை.நான் மன்னராட்சியை ஒழித்து மக்களாட்சியை நிறுவத்தான் போகிறேன்,அதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.
மன்னன் : எனக்கு பின்னால் இந்நாட்டில் என் மக்கள் ஆட்சி வேண்டுமானால் ஏற்படலாம். அனால் நீ கனவு காண்பது போன்ற மக்களாட்சி என்பது என்றும் பகல் கனவு தான்.
[நடந்தவற்றை கவனித்துக்கொண்டிருந்த அறிவழகன் கோபமாக உள்ளே நுழைகிறார்]
அறிவழகன் : மன்னா இவனை இப்போதே சிறையில் அடைத்தால் என்ன?
மன்னன் : வேண்டாம் இவன் கூவட்டும். சிறையில் அடைத்தால் இவனை தியாகி என்று கூறி கடற்கரை அறுகே சிலை வைத்து விடும் கூட்டம் தான் இந்நாட்டு மக்கள். இவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்போம் .
காட்சி-4
[தன் ஆக்ரோஷமான பேச்சுக்களாலும் அயராத உழைப்பினாலும் ஒரு மாபெரும் கூட்டத்தை சரவணன் திரட்டிவிட்டான். அந்த கூட்டத்துடன் அரண்மனையை நோக்கி படையெடுத்து வருகிறான்.பிறகு...]
சரவணன் : மக்கள் விரோத ஆட்சி புரியும் மன்னனே வெளியே வா.பார் உனக்கெதிராக திரண்டிருக்கும் கூட்டத்தை பார்.
மன்னன்( இரண்டு காவலாளிகள் மற்றும் அறிவழகனுடன் வெளியே வருகிறான்) : எத்தனை பெரிய கூட்டம்? சரவணா நீ உண்மைலேயே திறமைசாலி தான்(தனக்கே உரிய தலைகனத்துடன் சிரிக்கிறான்)
சரவணன் : போதும் உன் சிரிப்பு. உன் காலம் முடிந்தது.இனி மக்கள் ஆட்சியே.நான் கனவு கண்டது போன்ற மக்கள் ஆட்சியே. வெற்றி எனக்கே.
[தன்னுடன் வந்த மாபெரும் மக்கள் கூட்டத்தை நோக்கி சொல்கிறான்]
சரவணன் : இந்த மதிகெட்ட மன்னனை கைது செய்யுங்கள். இந்த அறிவிழந்த அரசனை ஆட்சியிலிருந்து துக்கி வீசுங்கள்.
[மக்கள் கூட்டம் கைது செய்தது,சிறு திருத்தும் மன்னனை அல்ல,சரவணனை].
சரவணன் : என்ன இது? என்னை என் கைது செய்கிறீர்கள்?
மன்னன் : காட்சிகள் ஒன்றும் இரண்டும் தான் சரவணா நீ அறிவாய்,இடையில் காட்சி -3 குறைகிறதே என்று உன் அறிவுக்கு எட்டவில்லையா?
என்ன கொடுமை சரவணன் இது?
இடையில் காட்சி மூன்றில் நடந்தது என்ன என்பதை நான் விளக்குகிறேன் கேள் [மன்னன் சரவணனை தனி அறைக்கு அழைத்து செல்கிறான்]
நீ சேர்த்த கூட்டத்தில் பெரும்பான்மையானோர் என் பக்கம் சேர்வதற்கு நான் பயன் படுத்திய ஆயுதம் "பட்டை சாராயமும் பிரியாணி பொட்டலங்களும்" தான். ஆனாலும் சும்மா சொல்ல கூடாது நீ சேர்த்தது மாபெரும் கூட்டத்தை தான். செலவு சற்று அதிகமாகத்தான் இருந்தது. மேல் நாடுகளில் பிரபலமான வண்ண தொலைகாட்சி பெட்டிக்களை இலவசமாக அளிப்பேன் என்று வாக்குறுதி அளித்தேன். அனைவருக்கும் இரண்டு ஏக்கர் நிலம் அளிப்பேன் என்றும் சொன்னேன். நீ சேர்த்த கூட்டம் எத்தனை பித்து பிடித்த பேராசை பிடித்த கூட்டம் என்று பார்த்தாயா? இந்நாட்டில் மொத்தம் இருப்பதே ஒரு லட்சம் ஏக்கர் நிலம் தான், ஆனால் இந்நாட்டில் ஒரு லட்சம் குடும்பங்கள் வசிக்கின்றன. ஒரு குடும்பத்திற்கு இரண்டு ஏக்கர் என்று கணக்கிட்டால் கூட சுலபமாக என் வார்த்தை ஜாலத்தை உணர்ந்திருக்கலாம்.
இவர்கள் உணர மாட்டார்கள் சரவணா. இந்த நாட்டில் உன் போன்ற லட்சியவாதிகளுக்கு மதிப்பில்லை.என் போன்று லட்சங்களிலும் கோடிகளிலும் மிதப்பவருக்கு தான் மதிப்பு.
என்னை ஆட்சியில் அமர்த்த என்னிடமே பணம் பெற்று கொள்ளும் இந்த மனிதர்களையா நம்பி நீ களத்தில் இறங்கினாய்? என்னை ஆட்சியில் அமர்த்தவே லஞ்சம் வாங்கும் இந்த மக்கள் நான் வாங்கும் லஞ்சத்தை பற்றியா கவலைப்பட போகிறார்கள்? பைத்தியக்காரா. இவர்கள் எதிர்பார்ப்பது என் போன்ற தலைவனைத்தானே தவிர உன் போன்றவர்களை அல்ல. இப்போதும் உனக்கு நான் எந்த தண்டனையும் வழங்கப்போவதில்லை. நீ மிக மிக திறமைசாலி,நீ நினைத்தால் இந்த மதிகெட்ட மக்கள் கூட்டத்தை என்னை விட நன்றாகவே ஏமாற்றலாம். உனக்காக அரசவை கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.
ஆனால் ஒன்றை மட்டும் நன்றாக புரிந்து கொள், மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்ற காலம் மாறி பல நூற்றாண்டுகள் ஆகி விட்டன. இன்றைய நிலை இது தான் : "மக்கள் எவ்வழி மன்னன் அவ்வழி".